இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : சிவப்பு வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 52 : 7-10 இரண்டாம் வாசகம் : எபேசியர் 2 : 19-22 நற்செய்தி வாசகம் : யோவான் 20 : 24-29 திருப்பலி முன்னுரை   பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.        நாம் வாழும் உலகம் பலதரப்பட்ட மக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பல்வேறு இனம், மதம், மொழி, பண்பாடு என்று மாறுபட்டு வாழ்ந்திடினும் இறைவன் அருளும் மீட்பு அனைவருக்கும் பொதுவானது. பிற இனத்தார் மீதும் இறைமகன் இரக்கம் கொண்டவர் என்பதை அவரது வாழ்வின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.      'யாரும் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்' ஆம்! அவ்வண்ணமே அவர் வழங்கும் மீட்பும் யாரும் நினையாத நேரத்தில் நிகழும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் அவரது மீட்பு திட்டம் நம்மில் நிறைவேறும்.அப்போது அவரது மீட்பில் பங்கேற்கும் நாம் அக்களித்து ஆர்ப்பரிப்பது உறுதி.        மாறாக இறைவனை கண்டால் மட்டுமே நம்புவோம் என்று இருத்தல் தவறு. ஏனெனில் இறைவனை கா...

ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

படம்
  நிறம்: பச்சை வாசகங்கள் முதல் வாசகம்: 1 அரசர்கள் 19: 16, 19-21 இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5: 1, 13-18 நற்செய்தி வாசகம்: லூக்கா 9: 51-62 திருப்பலி முன்னுரை    ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல ஆலயம் நோக்கி வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கிறேன்.     தாய் வயிற்றில் இருக்கும் போதே இறைவன் நம்மை தெரிந்து கொண்டார். இறைவனின் அழைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாய் அமையும். அந்த அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அழைக்கும் இறைவனின் பணி செய்ய எப்போதும் தயாராக இருப்பதே சாலச்சிறந்தது.           கலப்பையில் கைவைத்த பின் திரும்பி பார்ப்பதும், ஒரு செயலை செய்ய துணிந்த பின்பு பிறவற்றை குறித்து கலங்குவதும் தேவையற்றது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது. இதையே வள்ளுவமும் "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்     எண்ணுவ தென்பது இழுக்கு"  என்று குறிப்பிடுகிறது. ஆண்டவரின் திட்டம் என்றுமே சிறப்பு வாய்ந்தது. அவரிடம் மன்றாடி கேட்கும் போது அந்த திட்டம்...

ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் வாரம் (கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா)

படம்
  நிறம்: வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம்: தொடக்க நூல் 14: 18-20 இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 11: 23-26 நற்செய்தி வாசகம்: லூக்கா 9: 11-17 திருப்பலி முன்னுரை     கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா அதனோடு இணைந்த ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையருள் பெற்றுசெல்ல வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.      தந்தை கடவுளின் அன்பு மனிதனை உருவாக்கி, அவனது அடிமைத்தளையை அகற்றி மீட்டெடுத்தது. ஆண்டவராகிய இயேசுவின் அன்போ அதற்கு மேலாக சென்று தன் உடலையும் இரத்தத்தையும் மனிதர்களுக்காக கையளித்தது. இத்தகைய அளப்பரிய செயலுக்கு உற்ற துணையாய் வலிமையளித்தவர் தூய ஆவி என்னும் பங்காளர். இங்ஙனம் மூவரும் திருச்சபையாகிய திருவுடலை கட்டியெழுப்புகின்றனர்.      உலகில் ஒரு மனிதன் வழியாக சாவு வந்தது. மற்றொரு மனிதர் வழியாக மீட்பு வந்தது. அந்த மீட்புக்கு விலையானது திருவுடலும் திருஇரத்தமும். இந்த இரண்டும் இன்று நற்கருணை வடிவில் திருவிருந்தின் போது நம்மை சந்திக்கிறது. ஆகவே திருவிருந்தில் பங்கேற்கும் ஒவ்வொரு முறைய...

மூவொரு கடவுள் பெருவிழா (பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு)

படம்
  நிறம்: வெள்ளை  வாசகங்கள் முதல் வாசகம்: நீதிமொழிகள் 8: 22-31 இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 1-5 நற்செய்தி வாசகம்: யோவான் 16: 12-15 திருப்பலி முன்னுரை   படைத்தல், காத்தல், வழிநடத்தல் ஆகிய மூன்று பணிகள் வழி நம்மை வழிநடத்தும் மூவொரு கடவுள் பெருவிழாவில் கலந்து அவர்களிடம் இருந்து நன்மைப் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.       மனிதர்கள் அனைவரையும் தன் திட்டத்திற்கு ஏற்ப உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை படைப்பவர் தந்தைக் கடவுள். தந்தையின் திட்டம் நிறைவேற, நமக்கும் தந்தைக்கும் இணைப்பு பாலமாக இருந்து காப்பவர் இறைமகன் இயேசு. நமக்கு உண்மையை அறிவித்து இறைபாதையில் நம்மை வழிநடத்துபவர் தூய ஆவியார். இவர்கள் மூவரும் இல்லையேல் மனித வாழ்வு வெறுமையாக இருக்கும்.     உலகை உருவாக்கி அதனை தன் ஆற்றலுக்கு உட்படுத்த மனிதனை உருவாக்கியதிலிருந்து, தன் ஒரே மகனை நமக்காக கையளித்தது வரை இறை ஞானம் முக்கிய பங்காற்றியது. காலப்போக்கில் மனிதன் இறைவழியில் இருந்து விலகி உலக இன்பங்களுக்கு அடிமை ஆனான். உலக போக்குகளில் இருந்து மனிதனைக் காக்க இவ்வுலகிற்கு வந்தார்...

தூய ஆவி பெருவிழா

படம்
  நிறம் : சிவப்பு வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2: 1-11 இரண்டாம் வாசகம் : உரோமையர் 8: 8-17 நற்செய்தி வாசகம் :யோவான் 14: 15-16, 23-26 திருப்பலி முன்னுரை   தூய ஆவியார் என்ற துணையாளரின் விழாவில் பங்கேற்று அவரது ஆசீரை பெற இறையில்லம் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.      நமக்கு வலிமையளித்து நம்மை காக்கும் இறைவன் நம் வாழ்வுக்கு துணையாளராக தூய ஆவியாரை நியமிக்கின்றார். தூய ஆவியாரின் துணை நமக்கு இருப்பின் நமது மனிதத்தில் புனிதம் காண இயலும். நமக்கு புத்துயிர் அளித்து நாம் பயணிக்க வேண்டிய வழியில் தூய ஆவியார் என்றும் நம்மை வழிநடத்துவார்.        ஆனால் இன்று வளர்ச்சி என்ற போர்வை உலகில் பல மாற்றங்களை அன்றாடம் நிகழ்த்துகிறது. அவசரமான உலகில் இறை அன்பை, இறை அச்சத்தை மறந்து, தானே தலைவன் என்ற உணர்வில் பல செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இழக்கும் மனிதர் பலர். போதை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் ஊனியல்பின் காரணமாக விளைபவை.           இவற்றை களைந்து இறைவாழ்வு வாழ தூய ஆவியின் உடனிரு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா