இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 43: 16 - 21 இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 3: 8 - 14 நற்செய்தி வாசகம் : யோவான் 8: 1 - 11 நிறம் : ஊதா திருப்பலி முன்னுரை           தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.         'மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் இல்லை' ஆம் அன்பிற்கினியோரே, நாம் பல சமயங்களில் நம்முடைய கடந்த கால வாழ்வை எண்ணி பரிதவிக்கின்றோம். வாழ்வு ஒவ்வொரு சந்திப்பிலும் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவற்றை அனுபவங்களாக மாற்றி கடந்து செல்வதே சாதூர்யம்.           முந்தைய பாவ வாழ்வை எண்ணியெண்ணி தற்போதைய இறைவாழ்வை மறந்தோர் பலர் உளர். இவர்களைப் போல் அல்லாது இயேசுவை துணையாகக் கொண்டு வாழப்பழக வேண்டும்.           நம் கண்களில் இருக்கும் தூசியைப் பாராமல் பிறர் குற்றங்களை மட்டும் பார்ப்பதும், பிறரை தீர்ப்பிடுவதும் தவறு என்பதை உணர்வோம். பிறரை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றி அமைப்போம். நம்மை மீட்ட இற...

தவக்காலம் நான்காம் வாரம்

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : யோசுவா 5: 9, 10-12 இரண்டாம் வாசகம் : 2 கொரிந்தியர் 5: 17-21 நற்செய்தி வாசகம் : லூக்கா 15: 1-3, 11-32 நிறம் : சிவப்பு  திருப்பலி முன்னுரை   உலகின் பல முக்கிய உறவுகளில் இன்றியமையாத ஒன்று தந்தை-பிள்ளை உறவு. தனக்கென உழைக்காது பிள்ளைகளுக்காக உழைக்கும் மனமும், ஊதாரியாக திரிந்து அனைத்தையும் இழந்து வாழ்வை முடிக்கும் தருவாயிலும் பிள்ளைகளுக்காக இரங்கும் குணமும் தந்தைக்கு உரியது.       இத்தகைய மனநிலையில் தான் தந்தைக் கடவுள் அவர் பிள்ளைகளாகிய நமக்கும் மனம் இரங்குகிறார். எனினும் அவரது திட்டப்படி நில்லாமல் உலக இன்பங்களை முதன்மையாக எண்ணிய மனிதர்களையும் மீட்க இறுதியாக தன் மகனையே கையளித்தார்.            இதை உணர்ந்து செயல்பட நாம் முற்பட வேண்டும். கடவுளுக்கு ஏற்புடையவராக நாம் மாற கிறிஸ்துவில் ஒப்புரவு ஆவது அவசியம். இதை ஏற்று கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ இறைவனிடம் வரம் கேட்டு நற்கருணை வழிபாட்டில் இணைந்து செபிப்போம்.  முதல் வாசக முன்னுரை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வெற்றிகளைக் கூறுகிறது. நிலத்தின் பலனை ம...

தவக்காலம் மூன்றாம் வாரம்

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3: 1-8, 13-15 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 10: 1-6, 10-12 நற்செய்தி வாசகம் : லூக்கா 13: 1-9 நிறம் : ஊதா  திருப்பலி முன்னுரை      ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் முக முக்கியமானது. கடவுள் தான் தேர்ந்து கொண்ட மக்களை மீட்க அனைத்தையும் செய்ய வல்லவர். இதனால் மோசே முதல் கிறிஸ்து இயேசு வரை மீட்பு வரலாற்றில் பங்கு கொண்ட அனைவரும் கடவுளின் மனநிலையை ஏற்று மக்களை பராமரிக்க தங்களைக் கையளித்தனர்.               தம் மக்கள் என்றென்றும் நல்வழியில் பயணிக்க, மனம் மாற கடவுள் விரும்புகிறார். ஆனால் சிலர் இறைபராமரிப்பில் இருந்து விலகி செல்கின்றனர்; வாழ்வை இழக்கின்றனர். இதையே 'மனம் மாறாவிடில் அழிவு' என்கிறது நற்செய்தி வாசகம்.         மனம் மாறி இறைபராமரிப்பில் வளர இத்தவக்கலத்தை பயன்படுத்துவோம். நம் முன்னோர்களின் வாழ்வை முன்னடையாளமாகக் கொண்டு நம் வாழ்வை நெறிபடுத்துவோம். இறைவனின் இரக்கம் பெற்று மனம் மாற இறைவனிடம் வேண்டுவோம். ...

தவக்காலம் இரண்டாம் வாரம்

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : தொடக்க நூல் : 15:5-2, 17-18, 21 இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 3: 17 - 4:1 நற்செய்தி வாசகம் : மாற்கு 9: 28-36 நிறம்: ஊதா  திருப்பலி முன்னுரை   தவக்காலம் இரண்டாம் வாரம் வழிபாட்டில் பங்கேற்று உள்ளத்தில் இறைவனை ஏற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.           இயேசு உருமாறிய போது அவரது மனித சாயல் மறைந்து இறைச்சாயல் வெளிப்படுகிறது. இதன்வழி அவரே இறைமகன் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கிறார் என்றும் அறியலாம். மேலும் இறப்புக்கு பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் தெரிகிறது.           உலக இன்பங்களில் சிக்கி, இறை உறவை மறந்து, வாழ்வின் நோக்கத்தை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் உளமாற்றம் பெற இதுவே சரியான தருணம் என்பதை உணர்வோம். உண்மையான மனித வாழ்வு உள மாற்றம் பெறுவதிலேயே உள்ளது.         எண்ணங்கள் தூய்மையானால், செயல்கள் நெறிபடும். உயரிய செயல்கள் வழி வாழ்வு மாற்றம் பெறும். மாற்றம் பெற்ற நம் வாழ்வு நம்மை...

தவக்காலம் முதல் வாரம்

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : இணைச்சட்டம் 26:4-10 இரண்டாம் வாசகம் : உரோமையர் 10:8-13 நற்செய்தி வாசகம் : லூக்கா 4:1-13 நிறம்: ஊதா  திருப்பலி முன்னுரை    மரத்தின் நுனியைக் கொண்டு அதன் அடியை தெரிந்துகொள்ள முடியாது; மாறாக கனியைக் கொண்டு மரத்தை அறிய இயலும். ஆம்! செபம், தவம், தானம் ஆகிய மூன்று விடயங்களை உறுதிப்படுத்த, நம்மை இறைவனில் நிலைப்படுத்த நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இந்த தவக்காலம் .       இறைமகன் நாற்பது நாள் அலகையால் சோதிக்கப்பட்டார். அப்போது அவர் நம்பியது, அவரைத் திடப்படுத்தியது இறைவார்த்தை மற்றும் அவரது தவ வாழ்கையே. இதனோடு தவக்காலத்தின் மற்றொரு வெளிப்பாடு பிறருக்கு உதவுதல். உலகின் அற்புதமான நிகழ்வுகளில் மிக முக்கியமானது பிறருக்கு உதவி செய்வது.       ஆக யார் ஒருவர் இறைவார்த்தை மீது நம்பிக்கைக் கொண்டு, நீடித்த இறைவேண்டலில் நிலைத்து, பிறருக்காக இரக்கம் கொண்டு செயல்படுகின்றாரோ அவர் மீட்பு உலகறிந்தது. தவக்காலத்தில் நுழையும் நாம் இவை அனைத்தையும் மனதிற்கொண்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம்.  முதல் வாசக முன்னுரை  ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா