தவக்காலம் மூன்றாம் வாரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3: 1-8, 13-15
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 10: 1-6, 10-12
நற்செய்தி வாசகம் : லூக்கா 13: 1-9
நிறம் : ஊதா
ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் முக முக்கியமானது. கடவுள் தான் தேர்ந்து கொண்ட மக்களை மீட்க அனைத்தையும் செய்ய வல்லவர். இதனால் மோசே முதல் கிறிஸ்து இயேசு வரை மீட்பு வரலாற்றில் பங்கு கொண்ட அனைவரும் கடவுளின் மனநிலையை ஏற்று மக்களை பராமரிக்க தங்களைக் கையளித்தனர்.
தம் மக்கள் என்றென்றும் நல்வழியில் பயணிக்க, மனம் மாற கடவுள் விரும்புகிறார். ஆனால் சிலர் இறைபராமரிப்பில் இருந்து விலகி செல்கின்றனர்; வாழ்வை இழக்கின்றனர். இதையே 'மனம் மாறாவிடில் அழிவு' என்கிறது நற்செய்தி வாசகம்.
மனம் மாறி இறைபராமரிப்பில் வளர இத்தவக்கலத்தை பயன்படுத்துவோம். நம் முன்னோர்களின் வாழ்வை முன்னடையாளமாகக் கொண்டு நம் வாழ்வை நெறிபடுத்துவோம். இறைவனின் இரக்கம் பெற்று மனம் மாற இறைவனிடம் வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
மோசேயின் அழைப்பை மையமாக வைத்து அமைகிறது. கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அகற்றி அவர்களை விடுதலையை நோக்கி வழிநடத்தினார். என்றும் இருக்கின்றவரான இருக்கின்ற இறைவன் தாம் தேர்ந்து கொண்ட மக்களை இரக்கத்தோடு வழிநடத்துவார். இறைபராமரிப்பில் வளர வாசகம் வழி நம்மை தயாரிப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
முன்னோரின் வாழ்க்கை நிகழ்வுகளை முன்னடையாளமாகக் கூறுகிறது. இறைபராமரிப்பில் இருந்து விலகிய மக்களைப் போல் வாழாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருத்தூதர் பவுல். என்றும் உண்மையுடன் இறைபராமரிப்பில் வாழ நம்மை சீர்படுத்துவோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- பல்வேறு இனம், மதம், மொழி என்று வேறுபட்டருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வுடன் வாழவும், மக்களிடையே காணப்படும் பேத உணர்வுகள் மறைந்து என்றும் இணைந்து வாழ மன்றாடுகிறோம்.
- உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்க வரமருளும். என்றும் இயேசுவில் இணைந்து இறைவுறவில் நிலைபெற்று நல்ல மனிதர்களாக வாழ வரம் தாரும் இறைவா.
- மனிதன் புறத்தைப் பார்க்கிறார்; கடவுளோ அகத்தைப் பார்க்கிறார்; புறத்தோற்றத்தால் மனிதனை மனிதன் மதிப்பிடும் நிலமைகள் சீராகவும், புற அழகைப் போற்றாமல் அக மனதில் இறைவனைக் காணவும், நம்மைப் போல் பிறரை மதிக்கவும் அருள் தாரும்.
- குடும்பமாகிய குட்டித் திருச்சபையில் இணைந்து செயல்படும் எம் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கவும், அன்பு செய்யவும் அருள் புரியும். எங்களிடையே காணப்படும் பேதமை மறைந்து ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ உமது ஆசீர் வழங்கி காத்தருளும்.
- துன்பங்கள், துயரங்கள் எம்மை சூழ்ந்தால் நாங்கள் துவண்டுவிடாமல், உமது உடனிருப்பின் வலிமையால் அனைத்தையும் வெற்றி கொண்டு மகிழ்ச்சியுடன் உமது கரங்களுக்குள் வாழும் வரம் அருளும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen 🙏
பதிலளிநீக்கு