கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

தவக்காலம் முதல் வாரம்

 


வாசகங்கள்

முதல் வாசகம் : இணைச்சட்டம் 26:4-10

இரண்டாம் வாசகம் : உரோமையர் 10:8-13

நற்செய்தி வாசகம் : லூக்கா 4:1-13

நிறம்: ஊதா 

திருப்பலி முன்னுரை

   மரத்தின் நுனியைக் கொண்டு அதன் அடியை தெரிந்துகொள்ள முடியாது; மாறாக கனியைக் கொண்டு மரத்தை அறிய இயலும். ஆம்! செபம், தவம், தானம் ஆகிய மூன்று விடயங்களை உறுதிப்படுத்த, நம்மை இறைவனில் நிலைப்படுத்த நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இந்த தவக்காலம்

     இறைமகன் நாற்பது நாள் அலகையால் சோதிக்கப்பட்டார். அப்போது அவர் நம்பியது, அவரைத் திடப்படுத்தியது இறைவார்த்தை மற்றும் அவரது தவ வாழ்கையே. இதனோடு தவக்காலத்தின் மற்றொரு வெளிப்பாடு பிறருக்கு உதவுதல். உலகின் அற்புதமான நிகழ்வுகளில் மிக முக்கியமானது பிறருக்கு உதவி செய்வது. 

     ஆக யார் ஒருவர் இறைவார்த்தை மீது நம்பிக்கைக் கொண்டு, நீடித்த இறைவேண்டலில் நிலைத்து, பிறருக்காக இரக்கம் கொண்டு செயல்படுகின்றாரோ அவர் மீட்பு உலகறிந்தது. தவக்காலத்தில் நுழையும் நாம் இவை அனைத்தையும் மனதிற்கொண்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம். 

முதல் வாசக முன்னுரை

    முதற்பலன் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். முதற்பலனை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் முறையை மோசே மக்களுக்கு விளக்குகிறார். அடிமை வாழ்விலிருந்து நாட்டை உரிமையாக வழங்கிய ஆண்டவருக்கு நிலத்தின் முதற்பலனைக் கொடுப்பது சாலச்சிறந்தது. அவரது வலிமையும் ஆற்றலும் நம்மைக் காக்கும் கவசங்கள். இத்தகைய ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இதயங்களை தயாரிப்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

      அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே; அவர் மீது முழு நம்பிக்கைக் கொண்டு அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அருள் நலன்களைப் பொழிகிறார். கடவுளை மீட்பர் என அறிக்கையிடும் மக்கள் நிலைவாழ்வு பெறுவர். அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்றென்றும் நம்மை வெட்கத்திற்கு உள்ளாக்காது. இதனை வலியுறுத்துவதே திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய மடல். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. திருத்தந்தை மற்றும் திருஅவை  உறுப்பினர்கள் அனைவரும் தவக்காலத்தின் தன்மைகளை உணர்ந்து, செபத்திலும், தியாகத்திலும் சிறந்து விளங்க வரமருளும். அவர்கள் இறைமனதை பிரதிபலிக்க மன்றாடுகின்றோம். 
  2. உண்மையின் பிறப்பிடமே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் மக்களுக்கு உண்மையில் உழைத்திடவும், ஏற்ற தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் படைக்க, பொதுநல பணி ஆற்றவும் வேண்டிய வரமருள மன்றாடுகின்றோம். 
  3. அனைத்து இக்கட்டுகளிலும் எம்மை காக்கும் இறைவா! எம்மை வருத்தும் நோய்கள், வறுமை, வேலையின்மை ஆகிய அனைத்து துன்பங்களில் இருந்தும் எம்மை விடுவித்து, காத்து எமக்கு புதுவாழ்வு வழங்கி வாழ்வில் உயர வழிகாட்டும். 
  4. வளமையின் திறவுகோலே அன்பு இறைவா! உலகின் வளங்கள் அனைத்தையும் காத்தருளும். மக்கள் இத்தகு வளங்களை தேவைக்கு ஏற்ப உபயோகித்து தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தி நிலத்தின் வளம் காக்க மன்றாடுகின்றோம். 
  5. அன்பின் குடும்பமாக செயல்படும் நாங்கள் தவக்காலத்தின் வழி இறைவனில் ஒன்றிக்கவும், குட்டித் திருச்சபையாய் எம் குடும்பத்தை வழிநடத்த தேவையான வலிமையை இறைவார்த்தை வழியாக பெற மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா