கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

தவக்காலம் நான்காம் வாரம்

 


வாசகங்கள்

முதல் வாசகம் : யோசுவா 5: 9, 10-12

இரண்டாம் வாசகம் : 2 கொரிந்தியர் 5: 17-21

நற்செய்தி வாசகம் : லூக்கா 15: 1-3, 11-32

நிறம் : சிவப்பு 

திருப்பலி முன்னுரை

  உலகின் பல முக்கிய உறவுகளில் இன்றியமையாத ஒன்று தந்தை-பிள்ளை உறவு. தனக்கென உழைக்காது பிள்ளைகளுக்காக உழைக்கும் மனமும், ஊதாரியாக திரிந்து அனைத்தையும் இழந்து வாழ்வை முடிக்கும் தருவாயிலும் பிள்ளைகளுக்காக இரங்கும் குணமும் தந்தைக்கு உரியது. 

     இத்தகைய மனநிலையில் தான் தந்தைக் கடவுள் அவர் பிள்ளைகளாகிய நமக்கும் மனம் இரங்குகிறார். எனினும் அவரது திட்டப்படி நில்லாமல் உலக இன்பங்களை முதன்மையாக எண்ணிய மனிதர்களையும் மீட்க இறுதியாக தன் மகனையே கையளித்தார். 

          இதை உணர்ந்து செயல்பட நாம் முற்பட வேண்டும். கடவுளுக்கு ஏற்புடையவராக நாம் மாற கிறிஸ்துவில் ஒப்புரவு ஆவது அவசியம். இதை ஏற்று கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ இறைவனிடம் வரம் கேட்டு நற்கருணை வழிபாட்டில் இணைந்து செபிப்போம். 

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வெற்றிகளைக் கூறுகிறது. நிலத்தின் பலனை மக்கள் உண்ணும் பொருட்டு கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கினார். பாஸ்கா விழாவைக் கொண்டாடி, கானான் நாட்டின் விளைச்சலை உண்ணும்படி ஆண்டவரின் அருள் அவர்களுக்குள் நிறைந்தது. நமக்காக அனைத்தையும் ஆண்டவர் செய்து முடிப்பார் என்பது கண்கூடு. 

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவோடு ஒப்புரவாக நம்மை பணிக்கிறார் திருத்தூதர் பவுல். உலக மக்களின் பாவங்களைப் பொருட்படுத்தாமல் நம்மை கிறிஸ்துவின் வாயிலாக ஒப்புரவாக்கினார். இதனால் நாமும் பிறருக்கு ஒப்புரவு வழங்க கடமைப்பட்டுருக்கிறோம் என்பதை உணர்ந்தோராய் இறைவனில் இணைய நம்மை தயாரிப்போம். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. வழிகாட்டும் இறைவா! தவக்காலத்தில் பயணிக்கும் நாங்கள் செபத்தின் வழியாக உம்மோடு அதிகம் உறவாடவும்; பிறருக்கு உதவி செய்து வாழவும்; சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து உம் வார்த்தை வழி வாழ வரமருளும்.
  2. எமக்கு துணையாய் இருக்கும் இறைவா! அன்றாட வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சூழல்கள் அனைத்திலும் எமக்கு துணையாய் இருந்து வழிநடத்தும்; பயணங்களில் வழித்துணையாகவும், எமக்கு ஞான விளக்காகவும் செயல்பட வேண்டுகிறேன்.
  3. பணியிடங்களில் பாதுகாப்பும், மனத்திடத்துடன் அனைத்து பிரச்சினைகளையும் ஞானத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் பெற்று உமது பாதையில் நடக்க வரமருளும். எம் வாழ்வில் உம்மை பிரதிபலிக்கும் அருள் புரியும். 
  4. எங்கள் குடும்பங்களில் உம்மை அதிகமாக தெரிந்துகொள்ளவும், குடும்ப செபம் வழியே உம்மோடு அன்றாடம் உறவாடவும் அருள் புரியும். இறை-மனித பிணைப்பில் நாங்கள் என்றும் நிலைக்கும் வரம் தாரும். 
  5. எங்கள் வாழ்வில் பெற்றோர் பெரியோரை மதிக்கவும், அவர்கள் அனுபவமே எங்கள் வாழ்வு என்பதை நாங்கள் உணர்ந்து செயல்படவும்; அவர்களை என்றும் அன்புடன் பராமரிக்கும் வரம் அருள மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா