இடுகைகள்

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : ஊதா வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 7: 10-14 இரண்டாம் வாசகம் : உரோமையர் 1: 1-7 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 18-24 திருப்பலி முன்னுரை     திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துக்கள்.         அன்பின் ஞாயிறாகிய இன்று நாம் நம்மிடமும், பிறரிடமும் கொண்டுள்ள அன்பை சீர்தூக்கிப் பார்த்து செம்மைப்படுத்த நமக்கு ஆண்டவர் வழங்கும் வாய்ப்பை பெறுவோம். அன்பின் உயிர் வழியாய் அன்பை பிறருக்கு பகிர பிறக்கவிருக்கும் பாலகன் நமக்கு வாய்ப்பளிக்க இறைவனிடம் வேண்டுவோம்.         அன்பு ஆழமானது, அழகானது. அதை பிறரோடு பகிரும் போது பலமடங்கு பெருகி நம்மை உயர்நிலைக்கு எடுத்து செல்லும். ஆண்டவரின் தூதரிடம் உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என்று தம்மை அர்ப்பணித்த அன்னை மரியின் பண்பும் அன்பின் வெளிப்பாடு தான். தம்மை வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனின் அன்பு வியப்புக்குரியது.        மீட்பரின் வருகைக்காக காத்திருக்கும் நாம் அன்பெனும் தீபத்தை ம...

திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : சிவப்பு வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 35: 1-6, 10 இரண்டாம் வாசகம் : யாக்கோபு 5: 7-10 நற்செய்தி வாசகம் : மத்தேயு 11: 2-11 திருப்பலி முன்னுரை     திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று விண்ணரசில் நுழைய தங்களை தயாரிக்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.         கடவுளின் வருகை எத்தகையது என்றும் அவரது ஆட்சியில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்றும் இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன. விண்ணரசின் பின்னணியில் செயலாற்றும் திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியின் வாயிலாக விளக்கப்படுகிறார்.          மீட்பராகிய இயேசுவுக்கு முன் வழியை ஆயத்தமாக்க வந்தவர் திருமுழுக்கு யோவான். உலகில் பிறந்த மனிதருள் யோவானைவிட பெரியவர் இல்லையெனினும், விண்ணரசில் நுழையும் சிறியோரும் அவரினும் பெரியவரே என்று விண்ணரசின் மகிமையை பறைசாற்றுகிறார் நம் இறைமகன்.             விண்ணரசில் பங்குகொள்ள நம்மை நாம் தயாரிக்க உகந்த நேரம் இந்த திருவருகைக்காலம். நம் வாழ்வில் நடைபெறும் அனைத...

திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : ஊதா வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 11: 1-10 இரண்டாம் வாசகம் : உரோமையர் 15: 4-9 நற்செய்தி வாசகம் : மத்தேயு 3: 1-12 திருப்பலி முன்னுரை     திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.           ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்யவும், அவரது வருகைக்காக நம்மை தயாரிக்கவும் இந்த திருவருகைக்காலம் அமைகிறது. விண்ணரசின் வருகையை திருமுழுக்கு யோவான் நற்செய்தி வாசகத்தில் முன்னறிவிக்கிறார்.         விண்ணரசும் ஆண்டவரின் வருகையும் அவரது ஆட்சியும் எங்ஙனம் சிறந்து விளங்கும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஆண்டவரின் ஆட்சியில் பங்குகொள்ள நாம் நம்மை தயாரிக்க வேண்டும். அவரது அரசும் மாட்சியும் என்றும் முடிவில்லாதது அதை நமதாக்க நம்மில் பல மாற்றத்தை எதிர்பார்க்கிறார் நம் இறைவன்.                 நமது வாழ்வில் பல சூழல்களில் நம்மை சார்ந்திருப்போரை உதாசீனம் செய்திருக்கலாம், உறவுகளை உடை...

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

படம்
  நிறம் : ஊதா வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 2: 1-5 இரண்டாம் வாசகம் : உரோமையர் 13: 11-14 நற்செய்தி வாசகம் : மத்தேயு 24: 37-44 திருப்பலி முன்னுரை        திருவருகைக்காலம் முதல் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துக்கள்.                ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் அவரின் வருகைக்கு நம்மை தயாரிக்கும் காலம் திருவருகைக் காலம். பிறக்கவிருக்கும் பாலகன் இயேசுவை நம் உள்ளங்களில் தாங்க நம்மை மெருகேற்றும் காலம் இது.        மீட்பு நெருங்கி வந்துவிட்டது ஆகவே மனம்திரும்பி இறையாட்சிக்கு உட்படவும் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட இயேசு பிறப்பாகிய மகிழ்வின் செய்தி நமக்கும் தெரிவிக்கப்பட நம்மை தூய்மைப்படுத்த முற்படுவோம். ஆண்டவர் வரும் நேரமும் காலமும் நமக்கு தெரியாது. நாம் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ஆகவே அவரை வரவேற்க நாம் எப்போதும் தயாராக இருகக வேண்டும்.         உலகில் சிறுமைபட்டோரை பேரினம் ஆக்கவும், பிறரால் ப...

ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : 2 சாமுவேல் 5: 1-3 இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1: 12-20 நற்செய்தி வாசகம் : லூக்கா 23: 35-43 திருப்பலி முன்னுரை       கிறிஸ்து   அரசர் விழா மற்றும் ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு ஆகிய வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் வருகைக்காக தன்னை தயாரிக்க வந்திருக்கும் இறைமக்கள் மற்றும் அருட்பணியாளர்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.              உலகின் ஒருபக்கம் வறுமையில் வாட மறுபக்கம் செல்வம் கொழிக்க, போரும் கலவரமும் நாட்டின் எல்லையை விரிவாக்கும் மனநிலையும், போட்டியும் பொறாமைகளும் நிறைந்து தற்போது நடமுறை மாற்றம் நிகழ்கிறது. இதில் பாதிக்கப்படும் மக்கள் நலனை கருத்தில் கொள்ள யாரும் முன்வருவதில்லை.              உலகின் அரசராம் கிறிஸ்து இயேசு இத்தகைய நிலைமைகளை மாற்ற விரும்புகிறார். இதற்காகவே தன் இன்னுயிரை நமக்கு தியாக பலியாகத் தந்தார். தமது இரத்தத்தால் உலகை தூய்மையாக்கி, நாம் அவரில் ஒன்றிணைய தன்னையை நமக்கு உணவாக்கினார்.          இந்த அன்பு அ...

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : மலாக்கி 4: 1-2 இரண்டாம் வாசகம் : 2 தெசலோனிக்கர் 3: 7-12 நற்செய்தி வாசகம் : லூக்கா 21: 5-19 திருப்பலி முன்னுரை    பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு திருப்பலியில் இணைந்து ஆண்டவரின் இறையருள் வேண்டி இணைந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.        மனித உணர்வுகளை சாதகமாக்கி அதில் விளையாடும் விபரீத உலகில், இறைவன் இதோ சமீபத்தில் உள்ளார் என்று போலி இறைவாக்கினர்கள் உலவி வருகின்றனர். அவர்களின் வாக்குகளை கேட்காதபடிக்கு இறைவன் அவர்களுக்கு பதில் கொடுக்க நமக்கு வலிமை அளித்துள்ளார்.           இறைவாக்கினர்களுக்கெல்லாம் பெரிய இறைவாக்கினரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரவிருக்கும் தீங்கு பற்றி நற்செய்தியில் நம்மை எச்சரிக்கிறார். அச்சமயம் நாம் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதையும் தெளிவுற கூறுகிறார். உலகில் எது நடந்தாலும் நம் இறைவனின் கரம் நம்மை பாதுகாக்கும்.                    ஆண்டவரின் நாள் வரும் போது இத்தகைய உழைக்க மனமில்லாத போலி இறைவாக்கின...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா