கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு



 நிறம் : சிவப்பு

வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 35: 1-6, 10

இரண்டாம் வாசகம் : யாக்கோபு 5: 7-10

நற்செய்தி வாசகம் : மத்தேயு 11: 2-11



திருப்பலி முன்னுரை 

   திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று விண்ணரசில் நுழைய தங்களை தயாரிக்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

       கடவுளின் வருகை எத்தகையது என்றும் அவரது ஆட்சியில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்றும் இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன. விண்ணரசின் பின்னணியில் செயலாற்றும் திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியின் வாயிலாக விளக்கப்படுகிறார். 

        மீட்பராகிய இயேசுவுக்கு முன் வழியை ஆயத்தமாக்க வந்தவர் திருமுழுக்கு யோவான். உலகில் பிறந்த மனிதருள் யோவானைவிட பெரியவர் இல்லையெனினும், விண்ணரசில் நுழையும் சிறியோரும் அவரினும் பெரியவரே என்று விண்ணரசின் மகிமையை பறைசாற்றுகிறார் நம் இறைமகன். 

           விண்ணரசில் பங்குகொள்ள நம்மை நாம் தயாரிக்க உகந்த நேரம் இந்த திருவருகைக்காலம். நம் வாழ்வில் நடைபெறும் அனைத்தும் முன்குறிக்கப் பட்டவையே எனினும் தவறான வழியில் நாம் செல்லாமல் நம்மை பாதுகாத்து இறைவழியில் நம்மை தயாரிக்க முற்படுவோம். 

   நமது வாழ்வில் நடக்கும் அனைத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைத்து மனதார இறைவனை புகழ்வோம். படைத்த இறைவன் நமக்கு தேவையானவற்றை குறித்த நேரத்தில் நம்மிடம் ஒப்படைப்பார் என்பதை உணர்வோம். 

    இந்த திருவருகைக்காலத்தில் விண்ணரசைப் பற்றி நன்கு அறிந்து பிறருக்கும் முன்மாதியாக வாழவும், விண்ணரசைப் பற்றி பிறருக்கு எடுத்துரைக்கவும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 




முதல் வாசக முன்னுரை 

     இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. தூய வழியை பின்பற்றி விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்பதை முன்னறிவிக்கும் விதமாக இவ்வாசகம் அமைந்துள்ளது. ஆண்டவரின் வருகை மிக விரைவில் வரவிருக்கிறது. அவர் அநீதியை எதிர்த்து போரிடும் கடவுளாக நமக்காக வரவிருக்கிறார். ஆகவே அவரை எதிர்கொள்ள தளர்ந்து போன கைகளை திடப்படுத்தியும், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்தியும் நம்மை தயாரிப்போம். அவரது வருகை நமக்கு என்றென்றும் மகிழ்ச்சியும் நன்மையும் நிறைந்ததாய் இருக்க வாசகத்தை வாழ்வாக்குவோம். 



இரண்டாம் வாசக முன்னுரை 

     பொறுமையும் வேண்டுதல்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பின்னணியாகக் கொண்டு யாக்கோபுக்கு அருளப்பட்ட திருமுகம் அமைகிறது. பொறுமையோடு ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் பேறுபெற்றோர். பொறுமை அனைத்தையும் வெல்ல வல்லது. பொறுமையை கொண்டிருப்போருக்கு ஆண்டவர் வழங்கும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அவரது வல்ல செயலுக்காக பொறுமையோடு காத்திருப்போர் நிறைபலனை பெறுவர் என்பதை உணர்ந்தோராய் வாசகத்திற்கு மனதை திறப்போம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

எசாயா 61:1

  ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது! ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. போர்கள் இன்றி வாழ எம்மை அழைத்த இறைவா! அன்பு மிகுந்த இடங்களில் ஆயுதங்களுக்கு தேவை இருப்பதில்லை. உலகில் பிறர் பசியை போக்க தேவைப்படும் பணம் இன்று ஆயுதங்கள் வாங்கி குவிக்க உபயோகப்படுகிறது. நாங்கள் வாழும் இவ்வுலகில் ஒருவர் மற்றவரை சுரண்டாமல் வாழவும், ஆயுதங்களற்ற அன்பு உலகம் படைக்கவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எமது எண்ணங்களை தூய்மையாக மாற செய்யும் இறைவா! எண்ணங்கள் தூய்மையானால் செயல்கள் தூய்மையாகும், தூய்மை மிகு செயல்கள் வழியாக நாடு வளம் பெறும். உண்மையான தொண்டு செய்யும் மனம் தூய்மையான எண்ணங்களில் இருந்து துவங்கும். எமது எண்ணங்களையும் அதன்வழி எம் செயல்களையும் தூய்மையாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நன்மைதனங்கள் நிறைந்த உலகம் படைக்க எம்மை அழைத்த இறைவா!  தீமை இல்லாத உலகம், வஞ்சனை இல்லாத சமூகம், கேடு நினையா மனிதர்கள் இதுவே இறைவாக்கினர் பலர் கண்ட கனவு சமூகம். ஆகவே நன்மைகள் நிறைந்த சமூகம் படைக்கவும், நல்லதை மட்டுமே செய்யும் சிந்தை வளர்க்கவும் எமக்கு அருள்புரியும். தீமை விலக்கி நன்மை வளர்க்கும் தெளிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எமது பார்வையை விரிவாக்கி சமூகத்தை நோக்க அழைத்த இறைவா! எம் பார்வைகளின் எல்லைகளை தகர்க்கவும்; எமது மன எண்ணங்களும் செயல்களும் செய்திகளும் உலகை சென்றடைய வரமருளும். குறுகிய வட்டங்களை உடைத்து எமது பார்வை கடைநிலை மாந்தர் மீதும் படும் வகையில் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. உமது வருகையால் எம்மை திடப்படுத்தும் இறைவா! ஆண்டவராகிய உம் வருகைக்காக காத்திருக்கும் நாங்கள் உமது வருகையை எதிர்கொள்ள எம்மை முழுமையாக தயாரிக்கவும்; எமது உள்ளங்களில் பொறுமையும், அமைதியும் கொண்டு உமது புகழை எங்கும் பறைசாற்றவும்; உம் பிறப்பால் எமது வாழ்வில் அனைத்து நலன்களும் வளங்களும் வந்து சேர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா