கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு



 நிறம் : வெள்ளை

வாசகங்கள்

முதல் வாசகம் : 2 சாமுவேல் 5: 1-3

இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1: 12-20

நற்செய்தி வாசகம் : லூக்கா 23: 35-43



திருப்பலி முன்னுரை

     கிறிஸ்து அரசர் விழா மற்றும் ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு ஆகிய வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் வருகைக்காக தன்னை தயாரிக்க வந்திருக்கும் இறைமக்கள் மற்றும் அருட்பணியாளர்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

            உலகின் ஒருபக்கம் வறுமையில் வாட மறுபக்கம் செல்வம் கொழிக்க, போரும் கலவரமும் நாட்டின் எல்லையை விரிவாக்கும் மனநிலையும், போட்டியும் பொறாமைகளும் நிறைந்து தற்போது நடமுறை மாற்றம் நிகழ்கிறது. இதில் பாதிக்கப்படும் மக்கள் நலனை கருத்தில் கொள்ள யாரும் முன்வருவதில்லை. 

            உலகின் அரசராம் கிறிஸ்து இயேசு இத்தகைய நிலைமைகளை மாற்ற விரும்புகிறார். இதற்காகவே தன் இன்னுயிரை நமக்கு தியாக பலியாகத் தந்தார். தமது இரத்தத்தால் உலகை தூய்மையாக்கி, நாம் அவரில் ஒன்றிணைய தன்னையை நமக்கு உணவாக்கினார். 

        இந்த அன்பு அளவற்றது, ஆழமானது. இத்தகைய அன்பினால் அவர் அனைத்திற்கும் மிகப்பெரிய ஆதாரமாய் முதன்மையாய் திகழ்கின்றார். திருச்சபை என்னும் உடலை கட்டமைத்து நம் அனைவரையும் அதன் அங்கங்களாக்கி நம்மை வழிநடத்துகிறார். 

       இத்தகைய உலகின் அரசரின் விழாவை கொண்டாடும் நம் மனதிலும் வாழ்விலும் அவர் வாழ்வை முன்னிறுத்தி வாழ உறுதியேற்போம். என்றும் நம்மை வழிநடத்தும் கிறிஸ்துவின் அன்பை ஏற்று நமது வாழ்வை பிறருக்கு முன்மாதிரியாக வாழவும், கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம் உள்ளங்களை தயாரிக்கும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை

    இன்றைய முதல் வாசகம் சாமுவேல் இரண்டாம் நூலில் இருந்து அமைகிறது. தாவீது இஸ்ரேலுக்கு அரசர் ஆனதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. இஸ்ரேலின் ஆயனாக இருந்து அவர்களை வழிநடத்த கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் தாவீது. நாம் எந்நிலையில் இருந்தாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் வாழ்வு நலம் பெற வாழ வைக்க இறைவனால் முடியும். அத்தகைய இறைவனின் வார்த்தைகளை கேட்க மனதை திறப்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை

      திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. கிறிஸ்துவின் மேன்மையை பற்றி எடுத்து கூறுகிறது இவ்வாசகம். அனைத்திற்கும் முதன்மை மட்டுமல்லாது திருச்சபைக்கும் தலையாய் இருக்கிறார் இறைமகன். அவராலேயே உலகம் நிலைபெற்று வாழ்கிறது. அத்தகைய இறைவனை எதிர்கொள்ள நம்மை தயாரிக்க வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம். 




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற்கு 11:10

 ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!




நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. உலகின் அரசே எம் இறைவா! உலகின் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வதற்கு உமது அருளைப் பொழிந்தருளும். எந்தவித நோய்களும் எந்த இன்னல்களும் இன்றி மக்கள் அனைவரும் நிறைவாழ்வு வாழ உமது அருளைப் பொழிந்து காக்க கிறிஸ்து அரசே உம்மை மன்றாடுகின்றோம். 
  2. எம்மை வழிநடத்தி காக்கும் இறைவா! பல்வேறு காரணங்களால் வெளியூர்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் உமது மக்களை கண்ணோக்கி பார்த்து அவர்கள் எவ்வித பதற்றமும் நோயும் அண்டாமல் பணியில் பாதுகாப்பும் போக்குவரத்தில் உடனிருப்பும் அளித்து காத்தருளவும், அவர்கள் குடும்பங்களுக்கு நீரே உற்ற துணையாக இருந்து காத்தருள கிறிஸ்து அரசே உம்மை மன்றாடுகின்றோம். 
  3. அன்பின் இறைவா! உடல், உள்ள நோய்களால் வருந்தும் மக்களை உமது கரம் தேற்ற வேண்டுகிறோம். மருத்துவர்களுக்கெல்லாம் நீரே சிறந்த மருத்துவராய் இருந்து மக்கள் நலம் காக்கவும், அவர்களுக்கு ஆறுதலாய் இருந்து என்றும் அவர்கள் வாழ்வு செழிக்க நீரே துணை செய்ய வேண்டுமென்று கிறிஸ்து அரசே உம்மை மன்றாடுகின்றோம். 
  4. மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! பல்வேறு குற்றங்கள் புரிந்து சிறையில் இருக்கும் அனைவருக்கும் நீரே துணையாக இருந்து அவர்கள் தங்கள் குற்றங்களுக்காக மனம் வருந்தும் போது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்து மேலும் அவர்கள் வாழ்வில் குற்றங்களற்ற நிறைவாழ்வு வாழவும், மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டு வாழும் சமூகத்தையும் உருவாக்க உமதருள் பொழிய கிறிஸ்து அரசே உம்மை மன்றாடுகின்றோம். 
  5. பாதுகாத்து வழிநடத்தும் இறைவா! சுயநலம் துறந்து நாட்டிற்காகவும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் உழைக்கும் இராணுவ வீரர்கள், பல்வேறு அதிகாரிகள் அனைவருக்கும் நீரே உற்ற துணையாக இருந்து வழிநடத்தவும், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தேற்றரவாகவும் இருந்து வழிநடத்தவும் உமதருள் பொழிய கிறிஸ்து அரசே உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா