இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : சாலமோனின் ஞானம் 11: 22 - 12:2 இரண்டாம் வாசகம் : 2 தெசலோனிக்கர் 1: 11 - 2:2 நற்செய்தி வாசகம் : லூக்கா 19: 1-10 திருப்பலி முன்னுரை    பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் இரக்கத்தை பெற குழுமியிருக்கும் அனைத்து இறை மக்களுக்கும் வாழ்த்துக்கள்.            இறைவனின் இரக்கம் அளப்பரியது, ஆழமானது, அனைவருக்குமானது. இறைவனின் இரக்கத்தை இஸ்ரேல் மக்கள் பெற்றதால் கானான் நாட்டை கண்டனர். இவ்விரக்கமே நமக்காக சிலுவை மரணத்தை ஏற்க இறைமகனை பணித்தது.             உலகில் பல தலைவர்கள் வரலாம் போகலாம் என்றாலும் உன்னதர் இயேசுவின் வருகை அர்த்தமுள்ளது. அவரது இரண்டாம் வருகையில் நாம் அவருடன் வாழ இவ்வுலக வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ வேண்டும். நமக்கு அடுத்திருக்கும் பிற மத சகோதர சகோதரிகளுக்கும், ஆதரவற்றோர், துயருறுவோர் அனைவருக்கும் நாம் இரக்கம் காட்ட வேண்டும்.             இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று மறைநூலில் ...

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : சீராக் 35: 12-14, 16-18 இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 4: 6-8, 16-18 நற்செய்தி வாசகம் : லூக்கா 18: 9-14 திருப்பலி முன்னுரை     ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறை விசுவாசத்தை காத்து இறைபாதையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வந்திருக்கும் இறைவனின் மக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.          இறைமகன் இயேசு தன் தந்தையின் விருப்பத்தை தனதாக்கி தன்னை தாழ்த்தி இறைவிருப்பத்திற்கு தம்மை முழுமையாக கையளித்தார். இதனால் இன்று எப்பெயருக்கும் மேலான பெயரை கடவுள் தம் மகனுக்கு வழங்கினார்.         அறிவியலின் பரிணாமத்தில் வளர்ந்த உலகில் வாழும் நாம் எப்படி வாழ்கிறோம் என சிந்தனை செய்வோம். நான் தான் மெத்த படித்தவன், நான் தான் மேதாவி, எனக்கு அனைத்தும் தெரியும், என்னை வெல்பவர்கள் உலகில் இல்லை என்று பலர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி இறைவன் முன் தங்களை தாழ்த்த மறுக்கின்றனர்.           நம் இறைவன் அனைவருக்கும் பொதுவானவர்; நட...

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 17: 8-13 இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 3: 14-17, 4:1-2 நற்செய்தி வாசகம் : லூக்கா 18:1-8 திருப்பலி முன்னுரை     திருச்சபையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனோடு தன்னை ஒப்புரவாக்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.         தமக்கு தொந்தரவு தருபவர்களுக்கு நன்மை செய்ய நம் உலகில் பலர் உண்டு. அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவர்கள் கேட்பதை பலர் நிறைவேற்றுவர் ஆனால் மானிடமகன் தாம் தேர்ந்தெடுத்த மக்களுக்காக காலம் தாழ்த்தாமல் அனைத்தையும் நிறைவேற வகை செய்யவார் என்பது நற்செய்தி வழியாக வெளிப்படுத்தப்படுகிறது.           இன்றைய உலகில் காலம் தாழ்த்தி கிடைக்கப்பெறும் நல்லவைகள் நமக்கு தேவைப்படாதவையாக கருதப்படலாம், என்றாலும் எது எப்போது நமக்கு கிடைத்தால் நாம் மகிழ்வாக இருப்போம் என்று இறைவன் அறிவார். ஆகையால் காலம் கழிந்த நன்மைதனங்களுக்காக வருந்தாமல் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.              நம்மை...

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : 2 அரசர்கள் 5: 14-17 இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 2: 8-13 நற்செய்தி வாசகம் : லூக்கா 17: 11-19 திருப்பலி முன்னுரை    பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று தன்னை இறைவனுடன் இணைத்து இறைவனின் ஆசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.                  வாழ்வின் எச்சூழலிலும் அசைக்க முடியாத ஒன்று நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கை வாழ்வில் இருந்தால் நம் வாழ்வு மிகவும் அழகானதாக மாறும். நம்பிக்கையோடு சேர்ந்த நன்றி உணர்வும் இன்றைய நற்செய்தியின் மையமாக அமைந்துள்ளது.                தன் வாழ்வு நன்றாக மாறும், தன் நோய்கள் விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை மனிதர்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்து அவர்களின் உயிரோட்டமாக வாழ்வை மாற்றி நல்வழிப்படுத்துகிறது. இன்றைய நம் உலகில் போலியான நம்பிக்கைகள், வாக்குறுதிகள் மலிந்துள்ளன. இவற்றை இனம் கண்டு நம்மை காக்க இறைவனின் துணை அவசியம்.               இறைவன் மீது நாம் கொண்டுள்ள ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா