இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : சபை உரையாளர் 1:2, 2:21-23 இரண்டாம் வாசகம் :கொலோசையர் 3:1-5, 9-11 நற்செய்தி வாசகம் : லூக்கா 12:13-21 திருப்பலி முன்னுரை  பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க இறையில்லம் நாடி இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன்.     நான் என்ற சுயம் அழிந்து நாம் என்ற பிறர்நலம் பிறக்கும் போது உலகம் தன்னலமற்றதாய் திகழும். இத்தகைய மனதுடன் வாழ்ந்து காட்டியவரே நம் இறைமகன் இயேசு. நமக்காக தன்னை அழித்து இரக்கத்தின் சிகரமாய் என்றும் நம் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்து உள்ளது அவர் வாழ்வு.     இன்றைய சமூகத்தில் பிறர் உழைப்பை சுரண்டும் உள்ளங்களும், அடுத்த தலைமுறையினருக்கு செல்வம் சேர்க்கும் மனங்களும், உலக இன்பங்களுக்கு அடிமையாகி கட்டுப்பாடுகளற்று வாழும் மனிதர்களும் நம்மிடையே ஏராளம். இதனை களைந்து உண்மையான மனிதத்துடன் வாழவே நம் இறைவன் நம்மை அழைக்கின்றார்.    இவ்வுலக வாழ்வு நிலையற்றது. மெய்யான வாழ்வு விண்ணகத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்வோம். நிறை ஞானமும், மனித நேயமும், இரக்க குணம...

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : தொடக்க நூல் 18:20-32 இரண்டாம் வாசகம் : கொலோசையர் 2:12-14 நற்செய்தி வாசகம் : லூக்கா 11:1-13 திருப்பலி முன்னுரை  "முண்டி மோதும் துணிவே இன்பம்; உயிரின் முதிர்ச்சியே வாழ்வின் மலர்ச்சி"   இறையன்பில் வாழ்வின் அனுபவங்களை வாழ்க்கையாக்கி நிறைவாழ்வை பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.     மனிதராக பிறந்த அனைவரிடமும் காணப்படும் ஒன்று அன்பிற்கான ஏக்கம். ஒரு நீதிமான் இருந்தால் கூட இந்நகரை அழிக்க மாட்டேன் என்று கூரிய இறைவனும் நம்மிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மேய்ப்பருக்கு காணாமல் போன ஒரு ஆடு கிடைத்ததே மகிழ்ச்சி. வழிதவறிய நம்மை நல்வழியில் வழிநடத்தவே இறைவன் உலகிற்கு வந்தார்.    இறைவனில் இணைந்து பிறரை மன்னிக்கும் போது என்றும் நிறைவாழ்வு கிடைப்பது உறுதி. இறைவனிடம் அப்பா தந்தையே என்று மன்றாடினால் அவரது இரக்கம் என்றும் நம்மோடு இருக்கும். வாழ்வின் ஏக்கங்களான அன்பு, உறவாடுதல், பிணைப்பு அனைத்தும் இறை அனுபவத்தால் மனிதருக்கு கிடைப்பதே.    அனுபவங்களை வாழ்வாக கொண்ட மூத்த குடிமக்களின் விழாவை கொண்டா...

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : தொடக்க நூல் 18:1-10 இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1:24-28 நற்செய்தி வாசகம் : லூக்கா 10:38-42 திருப்பலி முன்னுரை   புறத்தைப் பார்க்கும் மனிதர்கள் இருக்க அகத்தைப் பார்த்து ஆராய்ந்து திட்டம் வகுக்கும் இறைவனின் நற்கருணை பலியில் பங்கேற்று இறையனுபவம் வழியாக இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.    தன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நல்லவிதமான பங்கை தேர்ந்தெடுக்க மனிதர்கள் விருப்பம் கொள்வார்கள். இத்தகைய நல்ல பங்கே நீடித்த மகிழ்ச்சி தரும் என்ற விதத்தில் அதற்காக காத்திருப்போர் ஏராளம். இவ்வுலக வாழ்வில் நாம் நல்ல பங்கு என்று தேர்ந்தெடுத்த பல காரியங்கள் இவ்வுலகத்தோடு முடிந்துவிடும்.     விண்ணுலக வாழ்வை உரிமையாக்கி கொள்ள நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு எது என்று சிந்திப்போம். இதை இன்றைய நற்செய்தி வழியாக விளக்குகிறார் நம் இறைவன். உலகம் சார்ந்த உபசரிப்பு, கடவுளின் வார்த்தைக்கு செவிமடுத்தல் இதில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடவுள் நம் அருகில் இருக்கும் போது நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கிறோமா?...

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : இணைச்சட்டம் 30:10-14 இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1:15-20 நற்செய்தி வாசகம் : லூக்கா 10:25-37 திருப்பலி முன்னுரை   வார்த்தையான இறைவன் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்த வரம் வேண்டி பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு வழிபாட்டில் இணைந்து செபிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இறைவன் பெயரால் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன்.     கடவுளின் வார்த்தைகள் உயிருள்ளது ஆற்றல் மிக்கது. அவரது வார்த்தைகளை கடைபிடித்து வாழ்வோரின் வாழ்க்கை எந்நிலையிலும் தடம் மாறாத கப்பல் போல குறித்த நேரத்தில் குறித்த இடத்தை சென்றடையும். அவ்வாறே நாம் திருச்சட்டத்திற்கு உட்பட்டு நடக்க ஏதுவான இரு பணிகளாவன; முழு மனத்தோடும் முழு உள்ளத்தோடும் இறைவனிடம் திரும்புவது மற்றும் நம்மை நாம் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது ஆகும்.     இவற்றை நன்கு அறிந்து வாழ்வோர் இவ்வுலகில் மட்டுமல்லாது விண்ணக வாழ்வையும் தனதாக்கி கொள்வர். இதையே இன்றைய நல்ல சமாரியன் உவமை நமக்கு எடுத்துக் கூறுகிறது. நம்மை நேசிப்பது போல பிறரையும் அண்டை வீட்டாரையும் நேசிப்பது கடவுளின் மிகவும் இன்றியமையாத முதன்ம...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா