இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 1: 1-11 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 9: 24-28 & 10: 19-23 நற்செய்தி வாசகம் : லூக்கா 24: 46-53 திருப்பலி முன்னுரை    இறைவனின் விண்ணேற்றம் மனிதரின் ஆயத்தம், இறைவனின் விண்ணேற்றம் மனிதரின் மறுவாழ்வு... இறைவனின் விண்ணேற்றப் பெருவிழாவில் கலந்து ஆசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்.      ஆண்டவராகிய இறைவன் இறந்து உயிர்த்தெழ வேண்டும், அவ்வாறு உயர்த்த ஆண்டவர் நாற்பது நாட்களுக்கு பின் விண்ணேற்றம் அடைய வேண்டும். இதன்படி உயிர்த்த இறைமகன் சீடர்கள் முன் விண்ணில் தூதர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டார்.     மீண்டும் நம் அனைவரையும் மீட்கும் பொருட்டு அவர் வருவார். உயிருக்கும் உடலுக்கும் கேடு வருவித்துக் கொள்ளும் இவ்வுலகில், தம் உடலையும் உயிரையும் நமக்காக கையளித்த மாபரன் இயேசு. நமக்காக அனைத்தையும் கையளித்தவர் அவர். அவரது அன்பு அளப்பரியது.         ஆண்டவரின் அன்பையும் அவரது உடனிருப்பும் இன்றைய சூழலில் நமக்கு இன்றியமையாதவையாக உள்ளன. அவற்றை உணர்ந்து அவரது உடனிருப்...

பாஸ்கா ஆறாம் வாரம்

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 15: 1-2, 22-29 இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 21: 10-14, 22-23 நற்செய்தி வாசகம் : யோவான் 14: 23-29 திருப்பலி முன்னுரை      சமாதானத்தின் ஞாயிறாகிய பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் ஆசி பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.     கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தும்பிகள் தாம் நாம் என்றாலும் சமாதானம் என்ற பண்பு நம்மிடம் புரையோடிப்போன ஒன்றுதான். சமாதானத்தை உலகில் பரப்பவே இறைமகன் மானிட மகன் ஆனார். தன் இனம், தன் குலம் என்று பாராமல் உலக மக்கள் அனைவருக்கும் சமாதானத்தை வழங்கினார். இந்த சமாதானத்தை வழங்கவே தான் உலகிற்கு வந்ததாக அவரே வாயார அறிக்கை இடுகிறார்.    இன்றைய நம் வாழ்வின் பெரும் பக்கங்கள் போட்டி, பொறாமை, வீண்பழி, பிறரை இடித்துரைத்தல் என்று பல விதங்களில் வீணாகிறது. நம் வாழ்வாகிய அழகிய புத்தகத்தை சமாதானம் என்னும் பேனா கொண்டு மெருகேற்ற இறைவனிடம் வேண்டுவோம். நாம் சமாதானத்தை பெறுவதோடு அதை பிறருக்கு பகிரவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்தல் வேண்டும...

பாஸ்கா ஐந்தாம் வாரம்

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 14: 22-27 இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 21: 1-5 நற்செய்தி வாசகம் : யோவான் 13: 31-33, 34-35 திருப்பலி முன்னுரை  உள்ளங்களின் ஆழத்தில் இருந்து இறைவனைப் புகழ்ந்து அவர் அருள் பெற்று வாழ்வை இறைவழியில் அமைத்து செபிக்க இறையில்லம் தேடி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் இறைவனின் நாமத்தில் வரவேற்கிறேன்.          அன்பு ஆற்றல் மிக்கது, பிரதிபலன் எதிர்பாராதது. தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்று கூறுகிறார் திருத்தூதர் பவுல். ஆனால் நண்பனை விட அதிகமாக இறைவன் நம்மை நேசித்தார் இதனால் தன் ஒரே மகனைக் கூட நமக்காக பலியிடவும் பாடுபட கையளிக்கவும் துணிந்தார்.      இன்றைய நாம் வாழும் நவீன உலகில் அன்பிற்கும், உறவிற்கும் கூடி ஒன்றாக வாழும் பண்பிற்கும் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. சாதாரண கருவிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட மனிதர்களுக்கு கொடுக்க மறுக்கிறோம். தன் மீது தூய அன்பு வைத்திருப்போரை ஏளனமாக பார்த்து ஏமாற்றும் சமூகத்தில் வாழ்கிறோம்.        நம...

பாஸ்கா நான்காம் வாரம்

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52 இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 7: 9, 14 - 17 நற்செய்தி வாசகம் : யோவான் 10: 27 - 30 திருப்பலி முன்னுரை    இணைந்திருப்பதே வாழ்வின் முதிர்ச்சி, இணைந்திருப்பதே வாழ்வில் மகிழ்ச்சி என்றும் இறைவனோடு இணைந்து வாழ இறை ஆசீர் பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.        இணைந்த வாழ்வு என்பது என்றும் பிரியாத வாழ்வு. பிறரை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. இணைந்த பயணத்தின் வழியே இலக்கை அடைவது. தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இருப்பது போல நாமும் சமூகத்தின் பிற மக்களோடு இணைந்து வாழ வேண்டும். இதையே இறைமகன் இயேசுவும் விரும்புகிறார்.           இதனாலேயே திருத்தூதர்களை ஏற்படுத்தி அவர்களை பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்ற பணிக்கிறார். மனம் மாறி நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு இறை பாதம் சரணாக வேண்டும். புதுவாழ்வு வாழ நற்செய்தி துணை புரியும் என்ற உண்மை புலப்படும். தினமும் இறை அன்பில் புது உயர்வு காண உள்ளம் ஏங்கும்.          ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா