கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

பாஸ்கா ஆறாம் வாரம்

 


நிறம் : வெள்ளை

வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 15: 1-2, 22-29

இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 21: 10-14, 22-23

நற்செய்தி வாசகம் : யோவான் 14: 23-29

திருப்பலி முன்னுரை

     சமாதானத்தின் ஞாயிறாகிய பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் ஆசி பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

   கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தும்பிகள் தாம் நாம் என்றாலும் சமாதானம் என்ற பண்பு நம்மிடம் புரையோடிப்போன ஒன்றுதான். சமாதானத்தை உலகில் பரப்பவே இறைமகன் மானிட மகன் ஆனார். தன் இனம், தன் குலம் என்று பாராமல் உலக மக்கள் அனைவருக்கும் சமாதானத்தை வழங்கினார். இந்த சமாதானத்தை வழங்கவே தான் உலகிற்கு வந்ததாக அவரே வாயார அறிக்கை இடுகிறார். 

  இன்றைய நம் வாழ்வின் பெரும் பக்கங்கள் போட்டி, பொறாமை, வீண்பழி, பிறரை இடித்துரைத்தல் என்று பல விதங்களில் வீணாகிறது. நம் வாழ்வாகிய அழகிய புத்தகத்தை சமாதானம் என்னும் பேனா கொண்டு மெருகேற்ற இறைவனிடம் வேண்டுவோம். நாம் சமாதானத்தை பெறுவதோடு அதை பிறருக்கு பகிரவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்தல் வேண்டும். 

    அங்கிங்கெனாதபடி எங்கும் இறைவன் வழங்கும் சமாதானத்தை விதைக்கவும், என்றும் அன்போடும், பொறுமையோடும், இரக்கத்தோடும் வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைவோம். 


முதல் வாசக முன்னுரை

   உலகின் அனைத்துவிதமான செயல்களும் நிரந்தரமற்றது. மக்கள் இதை உணராமல் தங்களிடையே போட்டி, பொறைமையோடு வாழ்கின்றனர். இதை களையும் வண்ணம் அமைந்ததே இன்றைய முதல் வாசகமாகிய திருத்தூதர் பணிகள் நூல். இறைவனின் இன்றியமையாத செயல்களை மட்டுமே மனிதரிடம் தூய ஆவியும் திருத்தூதர்களான பணியாளர்களும் அனுமதிக்கின்றனர். ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் தேவையற்ற செயல்களை விட்டொழித்து இறைவனில் வளர வாசகத்தை கேட்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

     இறைவனின் புதிய நகரத்தின் தோற்றத்தை எடுத்து கூறுகிறது யோவானின் திருவெளிப்பாடு நூல். எல்லாம் வல்ல ஆண்டவரையும் அவரது மகனுமாகிய இயேசு கிறிஸ்துவையும் அன்றி பிரிதொரு கடவுளோ கோயிலோ இன்றி அந்நகரம் எழுப்பப்பட்டது. இவ்வாறு தூய வாழ்வின் முக்கியத்துவம் இவ்வாசகம் வழியாக வெளிப்படுகிறது. தூய வாழ்வின் இன்றியமையாமையை உணர்ந்து கிறிஸ்துவின் வழியில் பயணிக்க வாசகத்தை வாழ்வாக்கி இறைவனில் இணைவோம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

  என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பர். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. அரசு தேர்வுகளை எழுதி முடித்த பள்ளி மாணவ மாணவிகள், வேலைவாய்ப்புக்காக தங்கள் எதிர்கால வாழ்வு சிறக்கும்வண்ணம் அரசு தேர்வுகளை எதிர்நோக்கி அதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் இளையோர் அனைவரும் தாங்கள் விரும்பியபடி வெற்றி பெற்றவும், அவர்கள் ஓய்வின்றி உழைக்கவும் உழைப்பிற்கு ஏற்ற பலன் பெறவும் அவர்களோடு இருந்து வழிநடத்த உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் தெய்வமே இறைவா! உம் இறைவார்த்தைகள் வழியாக உமது புகழை நாங்கள் அறிந்து கொள்ள எமக்கு வாய்ப்பளித்த நீர், உமது இறை மதிப்பீடுகளை பிறருக்கு பறைசாற்றவும் என்றும் உமது உடனிருப்பின் வழியே வாழ்வை அமைத்துக் கொள்ள வரம் தாரும் ஆண்டவரே. 
  3. உலகில் பிறந்து உமது வாழ்வை வழிதொழ வரமளித்த இறைவா! நாங்கள் வாழும் இந்த சமூக சூழலில் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு என்றும் சமாதானத்தோடு வாழவும், பிறரில் உம்மையே கண்டு உமக்கு பணிபுரிய வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. குடும்பங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே! எம் குடும்பங்களில் நாங்கள் பிறரை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையோடு வாழவும், குடும்ப செபம் வழியாக இன்னும் நிறைவாக உம்மை அறிந்து பிறருக்கு உம்மை எடுத்துரைக்கும் வரம் தாரும். 
  5. உலகை உருவாக்கி வழிநடத்தும் இறைவா! உலக தலைவர்கள் உமது இறையரசின் மதிப்பீடுகள் வழியாக மக்களை வழிநடத்தவும், புனிதர்கள் பாதையில் மனிதத்தை இவ்வுலகில் விதைக்க உமது தூய ஆவியாரின் அருட்கொடைகளை தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா