இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

பாஸ்கா மூன்றாம் வாரம்

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 5 : 27 - 32, 40 - 41 இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 5 : 11 - 14 நற்செய்தி வாசகம் : யோவான் 21 : 1 - 19 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி    கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் அனைத்தையும் படைத்தவர் அவரே! மானிடக்குலத்தின் மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா! திருப்பலி முன்னுரை   பாஸ்கா மூன்றாம் வாரத்தோடு இணைந்து, உழைப்பின் உறுதுணையாம் உழைப்போரின் பாதுகாவலாம் புனித சூசையப்பரின் விழாவைக் கொண்டாட இருக்கிறோம். இந்த பொன்னான நாளில் நற்கருணை கொண்டாட்டத்தில் தன்னை இணைத்து இறையாசீர் பெற கூடியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.         பல்லாயிரம் மக்கள் உழைப்பின் மூலம் தங்களை முன்னிருத்தி வாழும் இவ்வுலகில் பலரின் பணிகள்  மாறுபடினும் அனைவரின் உழைப்பின் நோக்கமும் ஒன்றுதான். மாந்தர்கள் எல்லோரும் தத்தம் பணிகள் மூலம் வாழ்வின் அடுத்த படிநிலையை நோக்கி செல்கின்றனர். இத்தகைய இறையாட்சி பணி செய்யவே இறைமகன் இயேசுவும் இவ்வுலகிற்கு வந்தார். இதிலே பணி குருத்துவத்தின் மையம் அடங்கியுள்ளது.      ...

பாஸ்கா இரண்டாம் வாரம்

படம்
  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 5: 12 - 16 இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 1: 9 - 11, 12 - 13, 17 - 19 நற்செய்தி வாசகம் : யோவான் 20: 19 - 31 திருப்பலி முன்னுரை   இறை இரக்கத்தின் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று உயிர்த்த ஆண்டவரின் ஆசீரை பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் இறைவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.      உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்கு தம் அருளைப் பொழிய அவர்கள் முன் வந்து நின்றார். சீடர்கள் அவரைக் கண்டு வணங்கினர். உயிர்த்த ஆண்டவர் இன்று நம்மைத் தேடி அவரது இரக்கத்தை நம்மிடம் பகிர வந்திருக்கிறார்.         இன்று பலர் இயேசுவைக் கண்டும் காணாமல் வாழ்கின்றனர். அண்டை வீட்டாரில், இன்னலில் தவிக்கும் மக்களில், வாழ்வை இழந்து தவிக்கும் மனிதரில் என்று பலதரப்பட்ட மக்களில் நாம் இறைவனை காண்பது இல்லை. அவரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் இல்லை.      இன்றைய சூழலில் நம்முடைய வாழ்வினை எண்ணிப் பார்ப்போம். தோமாவைப் போல இறைவனைக் கண்டால் தான் நம்புவேன் என்று நினைக்கிறோமா அல்லது காணாமலே அவரிடத்தில் நம்பிக்க...

பாஸ்கா திருவிழிப்பு

படம்
நிறம் : வெள்ளை  பொது முன்னுரை       உயிர்ப்பும் உயிரும் நானே என்ற இறைவனின் உயிர்ப்பு பெருவிழா இன்று. உலகினை உருவாக்கி, தன் சாயலாக மனிதனைப் படைத்து உலகை மனித ஆளுகைக்கு உட்படுத்தினார் இறைவன். இத்தகு அருள் பெற்ற இவ்வுலகம் காலப்போக்கில் இறைவனின் அன்பை மறந்து பாவத்திற்கு அடிமை ஆனது.     மனித குலத்தை மீட்க கடவுள் பல முறைகளை கையாண்டார். இறுதியாக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் நம் இறைவன். இது அவர் நம்மேல் வைத்த அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக அவரது கருணை இதில் வெளிப்படுகிறது.            உலக இன்பங்களுக்கு ஆட்பட்டு இறைவனின் அன்பை விட்டு விலகிய தருணங்களை எண்ணி பார்ப்போம். நமக்காக தன்னை கையளுத்த இறையன்பின் வழியே பிறருக்காக நம்மை கையளிப்போம். உயிர்த்த ஆண்டவரின் அருள் நம்முடன் இருந்து வழிநடத்த வரம் வேண்டுவோம்.  பாஸ்கா மெழுகுதிரி முன்னுரை   ஆதியும் அந்தமும் ஆன இறைவனின் பாஸ்கா விழாவை நினைவு கூறும் மெழுகுதிரி. உலகில் கடவுள் உருவாக்கிய முதல் படைப்பு ஒளி தான். அனைத்திற்கும் துவக்கமும் செயலின் தொடக்கமும...

பாஸ்கா ஞாயிறு (Easter Sunday)

படம்
  நிறம் : வெள்ளை  வாசகங்கள் முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 10: 34, 37 - 43 இரண்டாம் வாசகம் : கொலோசையர் 3: 1 - 4 நற்செய்தி வாசகம் : யோவான் 20: 1 - 9 திருப்பலி முன்னுரை      உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்னாள், பொன்னாள். ஆம்! இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள்.         பழைய பாஸ்காவில் செம்மறி ஆட்டின் இரத்தம் சிந்தப்படும். பு‌திய பாஸ்காவில் செம்மறியான நம் இறைவன் நமக்காக இரத்தம் சிந்தியதை நினைவு கூர்கிறோம். நமது பாவங்களுக்காக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் தந்தைக் கடவுள். இது அவர் நம்மீது வைத்துள்ள அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகிறது.           இயேசுவின் வாழ்வு மீட்பை சார்ந்தே அமைகிறது. அங்ஙனமே அவரது குரலும் ஒலிக்கின்றது. மீட்பு வரலாற்றின் பல அத்தியாயங்களை நமக்காக வாழ்ந்தார் நம் இறைவன். அவரது வாழ்வு என்றும் பிறரை வாழ வைப்பதிலே தான் அடங்கி இருக்கிறது.               அன்றும் இன்றும் என்றும் மக்கள் மீட்புக்காக குரல் கொடுக்கும் நம் மீட்பரின் உய...

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

படம்
  குருத்தோலைப் பவனி முன்னுரை லூக்கா 19: 28 - 40     அனைவரும் இறைவனிடம் நெருக்கம் கொண்டு இறை மனித உறவில் வளர நமக்கு அருளப்பட்டதே புனித வாரம். மனிதன் புனிதனாகவும், புனிதர்கள் இறைவனில் இணையவும் நாம் நினைவு கூறுவது இயேசுவின் திருப்பாடுகள்.        ஆண்டவரின் அரசராம் உலக மக்கள் அனைவரின் மீட்பராம் நம் இயேசுவின் ஒலிவ பயணத்தை நினைவு கூற இருக்கின்றோம். அன்று மக்கள் அனைவரும் ஆண்டவர் வழி தாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் வழிநெடுக தம் கைகளில் ஒலிவக் கிளைகளை ஏந்தி அவரைப் புகழ்ந்தனர்.       இன்று அதன் நினைவாக கைகளில் குருத்து ஓலைகளை ஏந்திய வண்ணம் பவணி செல்ல தயாராவோம். குருவானவர் குருத்து ஓலைகளை அர்ச்சிக்க, அவரைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து நாம் பெற்ற நன்மைகளுக்காக இறைவனைப் போற்றி ஓசான்னா கீதம் இசைப்போம். பவணியில் பங்கேற்போம்.  நிறம் : சிவப்பு   வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 50: 4 - 7 இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6 - 11 நற்செய்தி வாசகம் : லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 22: 14 - 23: 56 தி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா