கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

பாஸ்கா திருவிழிப்பு




நிறம் : வெள்ளை 

பொது முன்னுரை

     உயிர்ப்பும் உயிரும் நானே என்ற இறைவனின் உயிர்ப்பு பெருவிழா இன்று. உலகினை உருவாக்கி, தன் சாயலாக மனிதனைப் படைத்து உலகை மனித ஆளுகைக்கு உட்படுத்தினார் இறைவன். இத்தகு அருள் பெற்ற இவ்வுலகம் காலப்போக்கில் இறைவனின் அன்பை மறந்து பாவத்திற்கு அடிமை ஆனது. 

   மனித குலத்தை மீட்க கடவுள் பல முறைகளை கையாண்டார். இறுதியாக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் நம் இறைவன். இது அவர் நம்மேல் வைத்த அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக அவரது கருணை இதில் வெளிப்படுகிறது. 

          உலக இன்பங்களுக்கு ஆட்பட்டு இறைவனின் அன்பை விட்டு விலகிய தருணங்களை எண்ணி பார்ப்போம். நமக்காக தன்னை கையளுத்த இறையன்பின் வழியே பிறருக்காக நம்மை கையளிப்போம். உயிர்த்த ஆண்டவரின் அருள் நம்முடன் இருந்து வழிநடத்த வரம் வேண்டுவோம். 

பாஸ்கா மெழுகுதிரி முன்னுரை

  ஆதியும் அந்தமும் ஆன இறைவனின் பாஸ்கா விழாவை நினைவு கூறும் மெழுகுதிரி. உலகில் கடவுள் உருவாக்கிய முதல் படைப்பு ஒளி தான். அனைத்திற்கும் துவக்கமும் செயலின் தொடக்கமும் ஆனது ஒளியே. உலகின் ஒளியாம் இறைவன் நம் வாழ்வில் ஒளியாகி, வழியாகி நம்மை வழிநடத்த வேண்டி, இறை அருள் வேண்டி பணிவோம். அருட்பணியாளர் மெழுகுதிரியில் ஒளியேற்றி, "கிறிஸ்துவின் ஒளி இதோ!" என்று கூறும் போது "இறைவனுக்கு நன்றி " என்று பதிலுரைப்போம். பாஸ்கா திரியிலிருந்து ஒளியை பகிரும் நாமும் பிறருக்கு ஒளியாக நம்மை தயாரிப்போம். 

முதல் வாசகம் முன்னுரை 

முதல் வாசகம் : தொடக்க நூல் 1:1 - 2:2

   கடவுள் மண்ணுலகையும் அதன் உயிர்கள் அனைத்தையும் படைத்த நிகழ்வை தொடக்க நூல் எடுத்து உரைக்கிறது. கடவுளின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பான மனிதனை அவரின் சாயலில் உருவாக்குகிறார். தன் அனைத்து படைப்புகளுக்கும் ஆசி வழங்கி பலுகிப்பெருக பணிக்கிறார். அவரது சாயலைப் பெற்ற நாம் அவரின் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். இதனை உணர்ந்து உயிர்த்த ஆண்டவரின் கொடைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ வாசகத்தை வாசிக்க கேட்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை 

இரண்டாம் வாசகம் : தொடக்க நூல் 22:1-18

   கடவுள் ஆபிரகாமை சோதிக்கின்ற நிகழ்வை இவ்வாசகம் கூறுகிறது. ஆண்டவர் மீது கொண்ட அதீத பற்றினால் தனது ஒரே மகனையும் அவருக்கு கையளிக்க துணிந்தார் ஆபிரகாம். நம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்திற்கும் கடவுளே காரணம், ஆதலால் அவருக்காக அனைத்தையும் இழப்பதற்கு துணிதல் வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. கடவுளுக்காக இழக்க துணிந்தால் அனைவருக்கும் மேலாக கடவுள் நம்மை உயர்த்துவார். வாழ்வை இழக்கத் துணிவோர் அதைப் பெற்றுக் கொள்வார் என்பதை உணர்த்தும் இந்த வாசகத்தைக் கேட்டு வாழ்வாக்குவோம். 

மூன்றாம் வாசக முன்னுரை 

மூன்றாம் வாசகம் : விடுதலைப் பயணம் 14:15 - 15:1

   ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் மீது கொண்ட அன்பினால் எகிப்தியர்களிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை அளித்த நிகழ்வு இவ்வாசகத்தில் அமைந்துள்ளது. எகிப்திய மக்களுக்கு எதிராக போரிட்டு மாண்புடன் வெற்றி பெற்றார் நம் இறைவன். இதனால் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கும் என்பது தெளிவாகிறது. எப்போதும் நம்மிடம் அன்புகூறும் நம் இறைவன் ஒருபோதும் நம்மை கைவிடுவது இல்லை. அவரது துணையுடன் பாவத்திலிருந்து வெற்றி பெற வாசகத்தை வாசிக்க கேட்போம். 

நான்காம் வாசகம் : எசாயா 54:5-14

ஐந்தாம் வாசகம் : எசாயா 55:1-11

ஆறாம் வாசகம் : பாரூக்கு 3:9-15, 32 - 4:4

ஏழாம் வாசகம் : எசேக்கியேல் 36:16-17, 18-28

 திருமுகம் 

உரோமையர் 6 : 3-11

   திருமுழுக்கின் மூலம் கிறிஸ்து இயேசு உடன் இணைந்த நாம் அவரது இறப்பிலும் பங்கு பெறுதல் வேண்டும் என்கிறார் திருத்தூதர் பவுல். சிலுவையில் இறந்த இயேசுவோடு நம் பாவ வாழ்வும் இறந்துவிட்டது. புதுப்பிறப்பாக உயிர்த்த இறைவனுடன் நம் தூய வாழ்வும் உயிர்த்துள்ளது. பழைய பாவ வாழ்வை விட்டகன்று என்றும் உயிர்த்த இறைவனின் ஆசியுடன் தூய வாழ்வு வாழ இறைவார்த்தைக்கு உள்ளங்களைத் திறப்போம். 

நற்செய்தி வாசகம் : லூக்கா 24:1-12

திருமுழுக்கு திருவருட்சாதன முன்னுரை 

   இயேசுவின் இறைபணியின் துவக்கம் திருமுழுக்கின் வழியே தொடங்குகிறது. அனைவரையும் ஒன்றாக கூட்டி சேர்த்து நற்செய்தி பணியை புரிவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது திருமுழுக்கு தான். நற்செய்தி பணி மூலம் பலரை நல்வழிப்படுத்த துணையாக இருந்ததும் இவ்வருட்சாதனமே. இத்தகு சிறப்புமிக்க திருவருட்சாதன நிகழ்வில் பங்கு பெறுவோம். 

திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல் 

   திருமுழுக்கின் வழியே தூய ஆவியை பெற்று திருச்சபையில் இணைந்து வாழ அழைப்பது திருமுழுக்கு. நம் திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பிப்பதன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியில் உறுதி பெற்று நற்செய்தி பணியாற்ற நமக்கு ஆற்றலும் ஞானமும் கிடைக்க வரம் வேண்டுவோம். மூவொரு இறைவன் வழி இறைபணியாற்ற நம்மை தயாரிப்போம். 

பாஸ்கா தண்ணீர் புனிதப்படுத்துதல்

   நீரின்றி அமையாது உலகு, உலகின் பெரும்பங்கை நிறைந்திருப்பது நீரே. நீராடினால் உடல் தூய்மையாகும் அவ்வண்ணமே புனித நீரினால் மனம் தூய்மை பெறும். இயேசு கிறிஸ்து நீரிலே தான் திருமுழுக்கு பெற்றார், அவரின் முதல் புதுமையும் தண்ணீரை சார்ந்தே அமைந்தது. இத்தகு சிறப்பு பெற்ற தண்ணீர் நம் வாழ்வின் அங்கமான தண்ணீரை புனிதப்படுத்தும் நிகழ்வில் முழு மனதுடன் பங்கேற்போம். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு 

  1. அன்பும் அமைதியும் அறனும் பெற்று என்றும் இரக்கத்தோடு வாழவும்; பிறரிடம் அன்பு கொண்டு இறைவனின் அருள் மற்றும் அன்பை அனைவருக்கும் பகிரவும், உற்றார் உறவினர் அனைவரிடமும் என்றும் ஒற்றுமையோடு இருக்க வரமருளும். 
  2. உலகை உள்ளங்கையில் அடக்கும் மின்னணு சாதனங்கள் வழியே எம் வாழ்வை இழக்காமல், பிறரோடு உறவாடவும், இயற்கையோடு என்றும் இணைந்த வாழ்வு வாழவும், எம் வாழ்வை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த தேவையான அருள்தாரும்.
  3. இறைவனின் மதிப்பீடுகளை எங்கள் வாழ்வில் நாங்கள் கடைபிடித்து என்றும் இறைவனோடு இணைந்து வாழவும்; போட்டி, பொறாமை, வெளி வேடம் களைந்து, ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக பாவித்து அனைவரோடும் இணக்கமான வாழ்வு வாழ வரமருளும்.
  4. வெயில், மழை, பனி என்று பாராது இரவும் பகலும் விழித்து எம்மை பாதுகாக்க நாட்டின் எல்லைகளில் உயிர்த்தியாகம் செய்யும் எம் இராணுவ வீரர்கள் என்றும் உடல், உள்ள நலம் பெற்று என்றென்றும் மன தைரியத்துடன் வாழ அருள்புரியும்.
  5. இறை இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடும் நாங்கள், இறைவன் வழியே எம்மை பிறருக்கு அர்ப்பணிக்கவும், தியாகத்தில் பிறக்கும் உறவுகளை எம் வாழ்வின் இறுதி வரை என்றும் கடைபிடித்து மகிழ்வுடன் வாழ உமதருள் தாரும். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா