கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

பாஸ்கா இரண்டாம் வாரம்

 


நிறம் : வெள்ளை

வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 5: 12 - 16

இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 1: 9 - 11, 12 - 13, 17 - 19

நற்செய்தி வாசகம் : யோவான் 20: 19 - 31

திருப்பலி முன்னுரை

  இறை இரக்கத்தின் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று உயிர்த்த ஆண்டவரின் ஆசீரை பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் இறைவனின் நாமத்தில் வாழ்த்துக்கள். 

    உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்கு தம் அருளைப் பொழிய அவர்கள் முன் வந்து நின்றார். சீடர்கள் அவரைக் கண்டு வணங்கினர். உயிர்த்த ஆண்டவர் இன்று நம்மைத் தேடி அவரது இரக்கத்தை நம்மிடம் பகிர வந்திருக்கிறார். 

       இன்று பலர் இயேசுவைக் கண்டும் காணாமல் வாழ்கின்றனர். அண்டை வீட்டாரில், இன்னலில் தவிக்கும் மக்களில், வாழ்வை இழந்து தவிக்கும் மனிதரில் என்று பலதரப்பட்ட மக்களில் நாம் இறைவனை காண்பது இல்லை. அவரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. 

    இன்றைய சூழலில் நம்முடைய வாழ்வினை எண்ணிப் பார்ப்போம். தோமாவைப் போல இறைவனைக் கண்டால் தான் நம்புவேன் என்று நினைக்கிறோமா அல்லது காணாமலே அவரிடத்தில் நம்பிக்கை வைக்கின்றோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நம் கண் முன்னே தவிக்கும் மக்களின் வாழ்வுக்காக உரிமைக் குரல் கொடுப்போம். 

       இறை இரக்கம் பெற்று பிறர் வாழ இறை வழியில் நம் வாழ்வை அர்ப்பணித்து வாழ்வோம். இயேசுவே ஆண்டவர் என்பதை நம் வாழ்வின் வழியாக பிறருக்கு எடுத்துரைக்கும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 

முதல் வாசக முன்னுரை

      இயேசுவின் சீடர்கள் செய்த அரும் அடையாளங்களை திருத்தூதர் பணிகள் நூல் விளக்குகிறது. தமக்கு ஏதேனும் அதிசயம் நிகழுமா? தமது நோய்கள் குறையுமா? என்று எண்ணி திருத்தூதர்களை மக்கள் அணுகி வந்தனர். பலர் இவர்களுடன் இணைந்தனர். எருசலேமும் அதை சுற்றி வாழும் மக்களும் நலம் பெற்றனர்; கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். அவர்கள் வழி நலம் பெற இதயங்களை இறைவார்த்தையால் நிரப்புவோம். 

இரண்டாம் வாசக முன்னுரை

    வருங்காலத்தில் நிகழவிருக்கும் செயல்களை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலில் இவ்வாசகம் அமைகிறது. இப்போது இருப்பவரும் என்றும் இருக்கின்றவருமான இறைவனின் சொற்படி தான் கண்ட காட்சிகளை பிற நகரங்களுக்கு காட்சிப்படுத்துகிறார் திருத்தூதர். என்றும் வாழும் இறைவன், இறந்து உயிர்த்த ஆண்டவராம் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு வரவிருக்கும் துன்பத்தை அகற்றி வாழ இறைவார்த்தையை கவனமுடன் கேட்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 20: 29

      அல்லேலூயா, அல்லேலூயா, "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. அனைவரையும் அன்பு செய்ய வழியுறுத்தும் இறைவா! எங்கள் அயலாரில் உம்மையே கண்டு அன்பு செய்யவும்; அயலாரிடம் கொள்ளும் நல்லுறவு மேன்மேலும் எம்மை வளர்க்கும் என்பதை உணர்ந்து நாங்கள் செயலாற்ற வரமருளும். 
  2. உம்மை நாடி வருவோருக்கு நல்லதை செய்யும் தூயவரே! எம் வாழ்வில் நாங்கள் சிக்கி தவிக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்து விடுபடவும்; எமது வாழ்வை என்றும் மகிழ்வுடன் வாழவும் அனைவரிடமும் நல்லெண்ணத்துடன் பழகவும் உமது அருள் தாரும். 
  3. உழைக்கும் மக்களின் பாதுகாவலாம் இறைவா! அன்றாடம் பல தொழில்களில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வு பெறவும்; என்றும் உழைக்கும் அவர்கள் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் வாழ்வில் நினைத்த உயரத்தை அடைய அருள்புரியும். 
  4. மாணவர்களின் உற்ற துணையாம் இறைவா! படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தூய ஆவியாரின் கனிகள், கொடைகள் மற்றும் வரங்களை கொடுத்து வழிநடத்தும். அவர்கள் மிக்க ஞாபகத்துடன் அனைத்து தேர்வுகளையும் நேர்த்தியாக எழுதி, வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வரமருளும். 
  5. எங்களை நன்னெறியில் வழிநடத்தும் இறைவா! அன்றாடம் நாங்கள் சந்திக்கும் வேதனைகள், பழைய பாவ நினைவுகள், எங்கள் வாழ்வை அச்சுறுத்தும் பய உணர்வுகள் ஆகியவற்றில் இருந்து விடுதலைப் பெற்று, உம் துணையுடன் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற உமதருள் தாரும். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா