இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு

படம்
  வாசகங்கள் முதல் வாசகம் : சீராக் 27: 4-7 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15: 54-58 நற்செய்தி வாசகம் : லூக்கா 6: 39-45 நிறம் : பச்சை   திருப்பலி முன்னுரை   இறையில்லம் தேடி ஆசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு திருப்பலியை கலந்து இறைவேண்டல் புரிய உள்ளங்களைத் தயாரிப்போம்.        வாழ்வின் பரிணாமங்கள் பற்பல. அனைத்து நிலையிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்விலும் உள்ளத்தில் உண்மையாகவும் செயல்களில் நேர்மையாகவும் விளங்குவது இன்றியமையாதது.       இன்றைய நம் சமூகத்தில் தங்கள் குற்றங்களைப் பாராமல் அடுத்திருப்போரைத் தீர்ப்பிடும் மனங்கள் ஏராளம். நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை; கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை என்பதை இன்றைய வழிபாட்டின் வழியாக உணர்வோம்.        'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' ஆகவே உள்ளமாகிய கருவூலத்தில் நல்லவற்றை நிரப்புவோம். நம் செயல்கள் மற்றும் பேச்சுக்கள் வழி நல்லதை எண்ணி, நல்லவற்...

ஆண்டின் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு

படம்
வாசகங்கள் முதல் வாசகம் : 1 சாமுவேல் 26:2 7-9,12-13,22-23 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15:45-49 நற்செய்தி வாசகம் : லூக்கா 6:27-38 நிறம் : பச்சை  திருப்பலி முன்னுரை   ஆண்டின் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவன் அருள் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.    உலகம் பலதரப்பட்ட மக்களைத் தன்னகத்தேக் கொண்டு இயங்குகிறது. மக்களின் எண்ணங்களும் செயல்களும் அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. எந்தவொரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு உதவும் மனங்களும், என்ன செய்தாலும் எப்படி இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று எண்ணும் சுயநல மனங்களும் நம்மிடையே ஏராளம்.      உலகைப் படைத்த இறைவன் தன் மக்களின் பாவங்களுக்கு தன்னுடைய ஒரே மகனையும் கையளிக்கத் துணிந்தார். அவரை வழிபடும் நாமும் நம்மை வெறுப்போருக்கும் நன்மை செய்ய முற்பட வேண்டும். பிறரை தீர்ப்பளிக்காமல் மன்னிப்பு வழங்கவும், பகைவருக்கு அன்பு செய்யவும், என்றும் இரக்கம் உள்ளோராய் செயல்படவும் முற்படுவோம்.      நாம் அளக்கும் அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை உணர்வோம். பிறர...

ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

படம்
  வாசகங்கள்  முதல் வாசகம் - எரேமியா 17:5-8 இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 15:12,16-20 நற்செய்தி வாசகம் - லூக்கா 6:17,20-26 நிறம்: பச்சை  திருப்பலி முன்னுரை    பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலியோடு பாலர் சபை நாளையும் இணைந்து கொண்டாடுகிறோம். இன்றைய திருவழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.         அன்பே உருவான இறைவன் நம்மை அன்பில் வாழ அழைக்கிறார். அன்பிற்கு அடிப்படை நம்பிக்கை. இதில் நாம் யார் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பதும் நோக்கத்தக்கது. மனித நம்பிக்கை ஆழமற்றது. விரைவில் முற்று பெற்று, மனம் துவண்டுவிடும். ஆனால் இறை உறவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை தளர்ச்சியுற விடுவதில்லை. நம்மை தேற்றி ஆறுதல் அளிக்கவல்லது.   இறைவார்த்தைகள் நம்பிக்கை தரும். அந்த இறைவனின் வார்த்தை நற்செய்தி பணிக்கு நம்மை தயாரிக்கும்; துன்பமும் கவலைகளும் நம்மை வாட்டும்போது நமக்கு புத்துயிர் அளிக்கும். நம்பிக்கை மற்றும் இறைவார்த்தைகளை நம் இரு கண்களாகக் கொண்டு வாழும்போது இறைவுறவில் நிலைப்பது உறுதி....

ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

படம்
  வாசகங்கள்  முதல் வாசகம் - எசாயா 6:1-8 இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 15:1-11 நற்செய்தி வாசகம் - லூக்கா 5:1-11 நிறம் : பச்சை திருப்பலி முன்னுரை   ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்துருப்போருக்கு வணக்கம்.   கிறிஸ்தவ வாழ்வு என்பது எப்படியோ மேலோட்டமாக வாழ்வது அன்று; மாறாக ஆழமாக நற்செய்தியைத் தியானித்து, கடைப்பிடித்து அதன்படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. நம்மில் பலர் எளிதான அகலமான வாழ்வு வாழ விரும்புகிறோம். ஆனால் அதன் பலன் வெறுமை தான் என்பதை நாம் உணர்வதில்லை.  ஆழத்தில் சென்று வலைகளைப் போடுவது சற்று கடினமான செயல்தான் என்றாலும், நம் விசுவாச வாழ்வு என்னும் வலையை கிறிஸ்து இயேசுவுக்குள் ஆழமாகப் போடுவதன் மூலம் நிலைவாழ்வைப் பெற இயலும். இறைவனுடன் ஆழமாக நெருங்கி, இறை உறவில் செயல்படும் போது நமக்கு உண்டாகும் மாசற்ற மகிழ்ச்சியை இந்த உலகம் எவ்விதத்திலும் தர இயலாது.  உலக நாட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் நாம் ஆழமாக வாழ விரும்புகின்றோமா அல்லது அகலமாக வாழ விரும்புகின்றோமா என்பதை சிந்திப்போம். துன்பங்களும் பாடுகளும் அதிகமானாலும...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா