கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு



வாசகங்கள்

முதல் வாசகம் : 1 சாமுவேல் 26:2 7-9,12-13,22-23

இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15:45-49

நற்செய்தி வாசகம் : லூக்கா 6:27-38

நிறம் : பச்சை 


திருப்பலி முன்னுரை

 ஆண்டின் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவன் அருள் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

  உலகம் பலதரப்பட்ட மக்களைத் தன்னகத்தேக் கொண்டு இயங்குகிறது. மக்களின் எண்ணங்களும் செயல்களும் அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. எந்தவொரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு உதவும் மனங்களும், என்ன செய்தாலும் எப்படி இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று எண்ணும் சுயநல மனங்களும் நம்மிடையே ஏராளம். 

    உலகைப் படைத்த இறைவன் தன் மக்களின் பாவங்களுக்கு தன்னுடைய ஒரே மகனையும் கையளிக்கத் துணிந்தார். அவரை வழிபடும் நாமும் நம்மை வெறுப்போருக்கும் நன்மை செய்ய முற்பட வேண்டும். பிறரை தீர்ப்பளிக்காமல் மன்னிப்பு வழங்கவும், பகைவருக்கு அன்பு செய்யவும், என்றும் இரக்கம் உள்ளோராய் செயல்படவும் முற்படுவோம். 

    நாம் அளக்கும் அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை உணர்வோம். பிறரை தீர்ப்பிடாமல் இறைமனதின் வழியே பலன் எதிர்பாரா வாழ்வு வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசக முன்னுரை

  நமக்கு தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வதே சிறந்தது என்பதை மையமாக வைத்து அமைந்துள்ளது இவ்வாசகம். ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மீது கைவைக்காது, தம்மை குற்றப்பழியில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சாமுவேல் முதல் புத்தகம். அவரவர் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப பலன் கிடைக்கும் என்பதை கூறும் வாசகத்தைக் கேட்கும் நாமும் பிறருக்கு தீர்ப்பிடாமல் வாழ வாசகத்தைக் கவனமுடன் வாசிக்க கேட்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை

   முதல் மற்றும் கடைசி ஆதாம் பற்றி தெளிவாக எடுத்துரைகிறார் திருத்தூதர் பவுல். மனித இயல்புக்கு உரிய ஆதாமால் பாவம் உலகுக்கு வந்தது. விண்ணக இயல்புக்கு உரிய இயேசு நமக்காக தம் உயிரைக் கையளித்தார். நாம் மண்ணுலகை சார்ந்தவர்கள் ஆயினும் விண்ணக இயல்பைக் கொண்டிருந்தால் நமக்கான கைம்மாறு மிகுதி என்பதை உணர்ந்தோராய் வாசகத்தை வாழ்வாக்குவோம். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  • அன்புத் தந்தையே இறைவா! எம் திருஅவை உறுப்பினர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும்; அவர்கள் அனைவரும் பிறரை அன்பு செய்யவும், மன்னிக்கவும் தம்மைப் போல் பிறரை பாவிக்க வரமருளும். உம் பாதையில் பயணித்து பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • இரக்கத்தின் உருவே எம் இறைவா! எம் நாட்டு தலைவர்கள் மக்களுக்கு ஏற்ற தலைவர்களாக செயல்படவும், மக்கள் அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்களை செய்து, மக்களை ஒற்றுமையுடன் வழிநடத்தி, சுயநலம் இன்றி பொதுநலத்தோடு செயல்பட தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • வழிநடத்தும் நாயகனே இறைவா! இளையோர்கள் நல்வழியில் செயல்பட்டு, பெற்றோர், பெரியவர்களை மதித்து நடக்கவும், குறுகிய வட்டத்திற்குள் வாழ்வை வாழாமல் தன்னால் இயன்றவரை பிறருக்கு நன்னமைத்தனங்களை அளித்து சிறந்த வாழ்வு வாழ வழிகாட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • அனைவருக்கும் உற்ற துணையே எம் இறைவா! உடல் மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் அனைவரையும் கருணைக்கண் கொண்டு பாரும்; அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளித்து நீரே துணையாக இருந்து பாதுகாத்தருளும். உம் வார்த்தை வழி நம்பிக்கை வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • தளரா மனமுடன் எம்மைக் காக்கும் அன்பு இறைவா! நாங்கள் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்யவும், எங்கள் குடும்பங்களில் உம் உடனிருப்பை வெளிப்படுத்தவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து திருக்குடும்பமாக வாழ உமதருள் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா