இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : பச்சை வாசகங்கள் முதல் வாசகம் : அபக்கூக்கு 1: 2-3, 2: 2-4 இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 1: 6-8, 13-14 நற்செய்தி வாசகம் : மத்தேயு 18: 1-5, 10 திருப்பலி முன்னுரை   ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறைவனின் ஆசீர் பெற்று செல்ல வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.                 விண்ணரசு அனைவருக்கும் பொதுவானது. ஆண்டவரின் திட்டப்படி அவரது அறிவுரைப்படி நடப்போர் விண்ணரசில் நுழைவது சுலபம். கடவுளின் மீட்பும் அனைத்து இனத்தாருக்கும் பொதுவானது. அவரது மீட்பைப் பெற்றுக்கொள்ளும் அனைவரும் விண்ணரசில் நுழைவர் என்பது குறிப்பிடத்தக்கது.              சின்னஞ்சிறிய குழந்தைகளின் மனம் கபடற்றது. அனைத்தையும் அன்பால் ஏற்றுக்கொண்டு வாழும் உள்ளம் படைத்தோர் சிறியோர். குறைகள் கூற தெரியா உள்ளம் அவர்களுடையது. இத்தகைய சிறியோரின் உள்ளம் படைத்தோர் விண்ணரசில் நுழைவது மிக எளியது என்கிறார் இறைமகன்.                 விண்ணரசு இவ்வுலக ஆட்சி ...

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

படம்
  நிறம்: பச்சை வாசகங்கள் முதல் வாசகம்: ஆமோஸ் 6: 1, 3-7 இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 6: 11-16 நற்செய்தி வாசகம்: லூக்கா 16: 19-31 திருப்பலி முன்னுரை    பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்.        நிலைவாழ்வு என்பது இறையாட்சிக்கு உட்பட்டு வாழ்வது. உண்மையான இறையரசை இம்மண்ணுலகில் கட்டி எழுப்புவதே நிலையானது. விண்ணக வாழ்வும் மண்ணக வாழ்வும் வெவ்வேறானவை. எனினும் இறையாட்சி என்ற இறைவனின் அரசை மண்ணுலகில் உருவாக்கும் போதுதான் நிறைவுபெற்ற இறையரசு உருவாகிறது.               இறையரசின் மதிப்பீடுகளை கடைபிடிக்கும் போது இம்மையிலும் மறுமையிலும் நிலைவாழ்வை பெறுவது நிதர்சனம். இத்தகைய மதிப்பீடுகளை கடைபிடிக்கும் பாதை கடினமாக இருப்பினும் அதன் நிறைவு என்றுமே சிறப்பாக அமையும். கடினமான பாதையை பின்பற்றும் அனைவரும் முடிவில் நிறைவான மகிழ்வில் வாழ்வர் என்பது அனைவரும் அறிந்ததே.           நிலைவாழ்வு என்னும் கொடை கிறிஸ்து இ...

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

படம்
  நிறம்: பச்சை வாசகங்கள் முதல் வாசகம்: ஆமோஸ் 8: 4-7 இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 2: 1-8 நற்செய்தி வாசகம்: லூக்கா 16: 1-13 திருப்பலி முன்னுரை     ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு வழிபாட்டில் இணைந்து இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.            உலகில் கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கடவுள் மக்களை ஒரே மாதிரியாக உருவாக்கினார். ஆனால் மனிதர்கள் கடவுளை புறக்கணித்து நேர்மையற்ற பாதையில் பயணித்தனர். எனினும் கடவுள் நம் மீது கொண்ட மிகுந்த பாசத்தால் தன் ஒரே மகனையும் நமக்காக கையளிக்க துணிந்தார்.                 கடவுளின் நேர்மை மனிதர்களை நேர்மையாக மாற்றும். சிறியவற்றில் நேர்மையாக இருப்பவர்கள் மிகப் பெரியவற்றிலும் நேர்மையாக இருப்பர். நேர்மையற்ற செல்வத்தை ஒருவர் திறமையாக கையாண்டால் நேர்மையான முறையில் சேர்க்கப்படும் செல்வத்தையும் திறமையாக கையாள்வார்.        தனது பணியில் உண்மையும் நேர்மையும் கொண்டு செயல்படுபவர் என்றும் வாழ்வில் ...

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

படம்
  நிறம்: பச்சை வாசகங்கள் முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 32: 7-11, 13-14 இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 1: 12-17 நற்செய்தி வாசகம்: லூக்கா 15: 1-32 திருப்பலி முன்னுரை   ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.         காணாமற் போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்தார். தன்னிடம் இருப்பதை விட காணாமற் போனதை குறித்தே ஆண்டவர் மிகவும் வருந்துவார். காணாமற் போனது மீண்டும் கிடைத்தால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இராது என்கிறது நற்செய்தி.        பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காணாமற் போனது கிடைக்கும் போது விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மனம்மாறிய பாவியைக் குறித்தும் பெரும் மகிழ்ச்சி விண்ணரசில் உருவாகும். கடவுளின் இரக்கத்தைப் பெற நம்பிக்கையோடு இருத்தல் அவசியம்.          ஆண்டவரின் திட்டத்தை விட்டு விலகாமல் என்றும் அவரது பாதையில் பயணிக்க வேண்டும். இறைநம்பிக்கை கடவுளின் இரக்கத்தை நமக்கு பெற்று தருவதோடு அவரது வழியில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா