கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு



 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : 2 மக்கபேயர் 7: 1-2, 9-14

இரண்டாம் வாசகம் : 2 தெசலோனிக்கர் 2: 16 - 3: 1-5

நற்செய்தி வாசகம் : லூக்கா 20: 28-38


திருப்பலி முன்னுரை

   பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று வாழ்வோரின் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை காண வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

             தாராளமயமாகிக் கொண்டிருக்கும் உலகம், பிறரைப் பற்றி எண்ண நேரம் இல்லாமல் தன் வாழ்விற்காக ஓடும் கால்கள், தான் தனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழும் மனங்கள், மீட்பைப் பற்றி கவலைக் கொள்ளாத இளம் நெஞ்சங்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் நிறைந்ததே இவ்வுலகம். 

      இன்றைய கால மக்கள் நினைப்பதைப் போல அன்று தந்தைக் கடவுள் நினைத்திருந்தால் மனவுறுதி மிக்க நம் இரட்சகரும் அவர்வழி மீட்பும் நமக்கு கிடைத்திருக்காது. ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தம் மக்களின் மீட்புக்காக சிந்தப்பட வேண்டும் கடவுள் முன்குறித்ததை நிறைவேற்றவே மானிட உரு கொண்டார் நம் இறைவன். 

                நம் வாழ்வில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளைக் குறித்து நாம் கொள்ளும் அச்சம் தேவையற்றது. ஏனெனில் குறித்த நேரத்தில் குறித்ததை நிறைவேற்றுவதே நம் இறைவனின் வாக்கு. பாரபட்சம் இன்றி தன்னை தேடிவரும் அனைவருக்கும் அன்பை பொழிபவர் நம் கடவுள். 

           ஆகவே நம் நிலைமையை குறித்த அச்சமோ, தயக்கமோ இன்றி மகிழ்ச்சியில் என்றும் திழைக்கவும், இறைவனுக்கு நன்றி கூறுவதும் நம் கடமை. இதை உணர்ந்தோராய், தந்தைக் கடவுளின் அன்பும், இயேசுவின் மனவுறுதியும் நம்மில் நிலைபெற்று என்றும் மகிழ்வான வாழ்வு வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை

    மக்கபேயர் நூலில் இரண்டாம் பாகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. சகோதரர்கள் எழுவரின் திண்மமான சான்றைப் பற்றி எடுத்து கூறுகிறது இவ்வாசகம். கடவுள் தருவார் என்றும் கடவுள் தந்ததை அவருக்காக இழந்தால் மீண்டும் பெறுவோம் என்றும் கூறுகிறது இவ்வாசகம். இத்தகைய மனநிலையே இன்றைய சூழலில் மிகவும் அவசியம். குறித்த நேரத்தில் குறித்ததை நிறைவேற்றும் நமது இறைவனின் வார்த்தைகளை செவிமடுக்க நம்மை தயாரிப்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை

      கிறிஸ்தவ வாழ்வு வாழ வலியுறுத்தும் திருத்தூதரின் அழைப்பை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. கடவுளின் அன்பும் இயேசுவின் மனவுறுதியும் நம்மில் நிலைபெறும் போது நாம் என்றென்றும் இறைவழியில் விலகாது இருப்போம் என்கிறது இவ்வாசகம். மீட்பை பெறுவதை நம் இலக்காக கொண்டு பயணிக்கும் போது நம்பிக்கையும், மனவுறுதியும் தேவை என்பதை உணர்த்துகிறது இவ்வாசகம். வாசகத்தை கேட்கும் நாமும் அன்பும், மனவுறுதியும், நம்பிக்கையும் பெற்று வாழ வாசகத்திற்கு உள்ளத்தை திறப்போம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திருவெளிப்பாடு 1: 5-6

  கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர் இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1.  அன்பின் இறைவா! அனைத்தையும் உமது கைவேலைப்பாட்டினால் உருவாக்கினீர். குறித்த நேரத்தில் குறித்ததை உண்டாக்கினீர். உம் மக்களாகிய எமக்கும் எப்போது எது தேவை என்பதை நீர் உணர்ந்து செயல்படுகிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எமக்கு தகுந்த நேரத்தில் தகுந்தவற்றை தாமதமின்றி தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. மனவுறுதியில் நிலைபெற்ற இறைவா! எமது வாழ்க்கை நீர் அளித்தது. நீர் கொடுத்த வாழ்வை உமக்காக இழக்க துணிந்தால் அதை நிறைவாக நாங்கள் பெற்று கொள்வோம் என்பதை உணர்ந்து நாங்கள் வாழவும்; உமது ஆட்சியை பிறருக்கு எடுத்துரைத்து என்றும் உமது வழியினின்று விலகாமல் உம்மை துணையாகக் கொண்டு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எமது மீட்புக்காக தன்னை இழந்த இறைவா! எங்கள் வாழ்வு மீட்படைய நீர் எவ்வளவோ பாடுபட்டீர் என நாங்கள் அறிந்திருக்கிறோம். எமது சுயநலமற்ற வாழ்வில் பிறர்நலம் பேணும் உள்ளங்களாக நாங்கள் வாழவும், உமது அன்பை எங்கும் பறைசாற்ற வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இயற்கையை நேசிக்கும் இறைவா! பல்வேறு இயற்கை சீற்றங்கள், புயல், மழை, வறட்சி, கொள்ளை நோய்கள் போன்றவற்றால் வருந்தும் மக்கள் அனைவரும் விரைவில் நலம் பெற்று வாழவும்; நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நீரே நல்ல மருத்துவராய் இருந்து அவர்கள் விரைவில் நலமடைய உமதருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இறைவார்த்தையில் உறையும் இறைவா! எம் பாதைக்கு உம் வாக்கே விளக்கு, எம் வாழ்வுக்கு ஒளியும் அதுவே என்பதை நாங்கள் உணர்ந்து, இறைவார்த்தையை வாசிக்கவும் தியானிக்கவும் எமக்கு அருள்புரியும். இறைவார்த்தைகள் வழியாக நாங்கள் புத்துணர்ச்சி பெற்று புதுவாழ்வு வாழ வரமருள  உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா