கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு



 நிறம் : ஊதா

வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 11: 1-10

இரண்டாம் வாசகம் : உரோமையர் 15: 4-9

நற்செய்தி வாசகம் : மத்தேயு 3: 1-12



திருப்பலி முன்னுரை

    திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

         ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்யவும், அவரது வருகைக்காக நம்மை தயாரிக்கவும் இந்த திருவருகைக்காலம் அமைகிறது. விண்ணரசின் வருகையை திருமுழுக்கு யோவான் நற்செய்தி வாசகத்தில் முன்னறிவிக்கிறார். 

       விண்ணரசும் ஆண்டவரின் வருகையும் அவரது ஆட்சியும் எங்ஙனம் சிறந்து விளங்கும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஆண்டவரின் ஆட்சியில் பங்குகொள்ள நாம் நம்மை தயாரிக்க வேண்டும். அவரது அரசும் மாட்சியும் என்றும் முடிவில்லாதது அதை நமதாக்க நம்மில் பல மாற்றத்தை எதிர்பார்க்கிறார் நம் இறைவன். 

               நமது வாழ்வில் பல சூழல்களில் நம்மை சார்ந்திருப்போரை உதாசீனம் செய்திருக்கலாம், உறவுகளை உடைக்கும் வண்ணம் நமது செயல் அமைந்து இருக்கலாம், இரக்கமற்ற மனம், சுயநலம் போன்ற பல தேவையற்ற செயல்கள் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அவை அனைத்தையும் மாற்றும் நேரமே இந்த திருவருகைக்காலம். 

            நம் ஒவ்வொருவரிலும் நிறைவான மாற்றத்தை ஏற்படுத்தி, நம்மை தமதாக மாற்ற நினைக்கும் இறைவனின் மனதை நாமும் பின்பற்றுவோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்தோராய் நற்செய்தியின்பால் மனவுறுதியும் ஊக்கமும் கொண்டு இறையரசில் பங்கேற்கும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை

       இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. நீதியுள்ள அரசராம் இறைமகன் இயேசுவின் வருகையையும் அவரது அரசில் எவ்வாறு மக்கள் வாழ்வர் என்றும்  எசாயா முன்னறிவிக்கிறார். நீதியும் உண்மையும் கொண்டு மக்களை தன் அன்பால் வழிநடத்தி பாதுகாக்கும் அரசன் இறைமகன் என்றும், வேற்றுமைகள் களைந்து மக்கள் பாதிப்புகள் இன்றி ஆண்டவரைப் பற்றிய முழு அறிவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வர் என்றும் கூறுகிறார் இறைவாக்கினர். ஆகவே இறைவனின் அரசில் பங்குகொள்ள நம்மை தயாரிக்க வாசகத்திற்கு இதய கதவுகளை திறப்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை

        உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் நற்செய்தி அனைவருக்கும் பொதுவானது என்பதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. நற்செய்தியினால் மனவுறுதி மற்றும் ஊக்கத்தை நாம் பெற முடியும் என்றும் நம்மைப் போல பிறரையும் எண்ணி பிறரையும் நற்செய்தியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்றும் கூறுகிறது இவ்வாசகம். கிறிஸ்து இயேசுவை நம் முன்மாதிரியாகக் கொண்டு அனைவரும் ஒரே மனத்தவராய் வாழ வாசகத்தை வாழ்வாக்குவோம். 



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக்கா 3: 4,6

  ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. நிறைபலன் தர எம்மை படைத்த இறைவா! எமது வாழ்நாள் நீர் உருவாக்கியது, எமது வாழ்வை அர்த்தமுள்ள வகையில் அமைத்து வாழவும், மனிதர்களாகிய நாங்கள் கடவுளால் அறுவடை செய்யப்பட வேண்டுமெனில் பயன்மிக தர வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து உம்மால் அறுவடை செய்யப்பட எமது வாழ்வை அர்ப்பணிக்கும் துணிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நேரிய வழியில் வாழ எம்மை பணித்த இறைவா! கடவுளின் வழிகள் நேரியவை, உண்மையற்ற மனிதர்கள் கடவுளுக்கு அஞ்சுவது இல்லை ஆனால் நேர்மையானோர் கடவுளின் வழியை பின்பற்றி வாழ்கின்றனர். எமது வாழ்வும் நேரியதாக உண்மையுள்ளதாக மாற அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பின் வழியாக வாழ எம்மை அழைத்த இறைவா! மக்களைப்பற்றி கவலைப்படாத அரசியல் வளர்ச்சி பெறாது என்பதை உணர்ந்து எம் தலைவர்கள் மக்கள்பால் அன்பு கொண்டு வாழவும், அதீத பெருமை கொள்ளாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் அவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டியவற்றை செய்யவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. புதிய உலகம் படைக்க எம்மை அழைத்த இறைவா! உமது வருகையால் உலகம் புதிதாகவும், நன்மைதனங்கள் நிறைந்த உலகமாகவும் இருக்க உமதருள் தாரும். அழுகையும் துன்பமும் இல்லாத புதிய உலகை படைக்க நாங்கள் ஈடுபாட்டுடன் உழைக்க உமதருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இயற்கையை நேசிக்கும் அன்பரே இறைவா! மரங்கள் மனித குலத்தை வாழ்விப்பவை, இயற்கையை நேசிக்கும் மனிதன் இறைவனில் உறைகின்றான் என்பதை நாங்கள் உணர்ந்து எங்கள் வாழ்வை இயற்கையோடு இணைந்த வாழ்வும் இயற்கையை நேசித்து அதை பாதுகாக்கவும் நல்மனம் தந்து எம்மை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா