கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு


 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : எரேமியா 38 : 4-6, 8-10

இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12 : 1-4

நற்செய்தி வாசகம் : லூக்கா 12 : 49-53

திருப்பலி முன்னுரை 

  ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் இறைமக்களாகிய உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

 இறைவாக்கினர்கள் எவ்வாறு உண்மையான வாழ்வு வாழ வேண்டும் என்றும் இறைவன் துணையோடு நம் வாழ்வை எங்ஙனம் சீரமைக்க வேண்டும் என்றும் இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. 

   உண்மையான உறவுகளில் பிளவுகள் இருப்பதில்லை. பிளவுகளை ஏற்படுத்தும் உறவுகள் இறைவனின் அருள் பெற்றவை ஆகாது. தந்தை - மகன், தாய் - மகள், என்று எதிரெதிராக பிளவுபட்ட சமூகத்தை சீர்படுத்தி மீட்டெடுக்கவே இறைமகன் உலகிற்கு வந்தார். 

    மனிதனுக்கு மனிதன் பிளவுபட்டு வாழ்வதை விடுத்து இணைந்து பயணிக்க இறைவன் நம்மை அழைக்கின்றார். வேறுபாடுகளைக் களைந்து இணைந்து வாழ்வதே என்றும் சிறந்தது. இணைந்து பயணிக்கும் சமூகம் என்றும் பிளவுறாமல் ஒற்றுமையின் பிறப்பிடமாக, அனைவரையும் ஏற்றுக்கொண்டு நிலைவாழ்வு பெறும். 

   இத்தகைய இணைந்து வாழும் சமூகமே இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்வோம். மக்களிடையே பிளவு ஏற்படாமல் என்றும் ஒன்றிணைந்து வாழ வரம் வேண்டி நற்கருணை வழிபாட்டில் பங்கெடுப்போம். 


முதல் வாசக முன்னுரை

  இறைவாக்கினருக்கு எதிராக தீங்கு செய்வோரை குறித்து எச்சரிக்கும் விதமாக முதல் வாசகம் அமைகிறது. இறைவாக்கு உரைப்போருக்கு எதிராக செயல்பட்டு அவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும் மக்களுக்கு ஏற்படும் விளைவை ஏரேமியா இறைவாக்கினர் தன் வாழ்வு வழியாக விளக்குகிறார். வாசகத்தை கேட்கும் நாமும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு உண்மை இறைவாக்கினர்களைப் போற்ற வாசகத்தை வாழ்வாக்குவோம். 


இரண்டாம் வாசக முன்னுரை

  திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவர் நமக்கு அளிக்கும் பயிற்சியும் அதனால் நமக்கு கிடைக்கும் முடிவில்லா வாழ்வு பற்றியும் இவ்வாசகம் எடுத்துரைக்கிறது. ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் ஓட்டத்தை ஓடும் போது இறைவனின் அருள் நம்மை உயர்த்தும் என்று கூறும் வாசகத்தை மனதிற்கொண்டு இறைவன் துணைக்கொண்டு நிறைவாழ்வு வாழ உள்ளங்களை தயாரிப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 10 : 27

 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1.  எண்ணங்களை சீர்படுத்தி வாழ்வை அழகாக்கும் இறைவா! எங்கள் மனம் உலகு சார்ந்த நிலையற்ற செல்வங்களை குறித்து எண்ணாமல் நிலையான விண்ணக வாழ்வின் நிறை மதிப்பீடுகளான அன்பு, அமைதி, இரக்கம், ஈகை, மன்னிப்பு போன்ற உயரிய எண்ணங்களுக்கு முதலிடம் கொடுத்து எம் வாழ்வை உமக்கு உகந்த வாழ்வாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மையின் பிறப்பிடமே எமது இறைவா! எம் அதிகாரிகளும் தலைவர்களும் நாட்டின் மக்களுக்கு பொய்மைத்தனங்கள் நிறைந்த வாக்குறுதிகள் வழங்குவதை விடுத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டியவற்றை செய்யவும், மக்கள் வாழ்வை மேம்படுத்தும் தன்னலமற்ற நல்ல தலைவர்கள் உருவாக உமது அருளைப் பொழிந்தருள உம்மை மன்றாடுகின்றோம். 
  3. சிறுமையுற்றோரை வாழ வைக்கும் எம் இறைவா! எம்மிடையே சாதி, மதம், இனம், மொழி என்ற போர்வையில்  மக்கள் குழுவில் இருந்து சிறுமையுற்று தனித்து வாழும் மக்களை கண்ணோக்கி பாரும், அவர்களை எங்கள் உடன்பிறப்புகளாக பாவித்து அவர்தம் வாழ்வு வளம்பெற ஆவன செய்யவும், இணைந்து வாழும் புதிய சமூகம் உருவாகவும் உமது அருளைப் பொழிந்து காக்க உம்மை மன்றாடுகின்றோம். 
  4. நல்ல சமூகத்தை உருவாக்கும் அன்பு இறைவா! உருவாக்குவதும் கட்டி எழுப்புவதும் உமது கைவண்ணம் என்பதை மறந்து நீர் உருவாக்கிய சமூகத்தை உடைப்பவர்களாக நாங்கள் இராமல் என்றும் உமது படைப்பின் நலனில் அக்கறையுள்ள மனிதர்களாக புதிய நலமான சமூகத்தை நாங்களும் இணைந்து உருவாக்க உமது அருளைப் பொழிய உம்மை மன்றாடுகின்றோம். 
  5. எம்மை வழிநடத்தும் இறைவா! மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தாத வழிபாடுகள் வெறுமையானவை என்பதை நாங்கள் உணரவும், எம் வழிபாடுகள் அர்த்தமுள்ள வகையில் அமையவும் அதன்வழியாக பிறரது வாழ்வை வளப்படுத்தும் மனம் பெற்று தூய வாழ்வு வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா