கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு



 நிறம் : பச்சை

வாசகங்கள்

முதல் வாசகம் : தொடக்க நூல் 18:1-10

இரண்டாம் வாசகம் : கொலோசையர் 1:24-28

நற்செய்தி வாசகம் : லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை

  புறத்தைப் பார்க்கும் மனிதர்கள் இருக்க அகத்தைப் பார்த்து ஆராய்ந்து திட்டம் வகுக்கும் இறைவனின் நற்கருணை பலியில் பங்கேற்று இறையனுபவம் வழியாக இறையாசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

   தன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நல்லவிதமான பங்கை தேர்ந்தெடுக்க மனிதர்கள் விருப்பம் கொள்வார்கள். இத்தகைய நல்ல பங்கே நீடித்த மகிழ்ச்சி தரும் என்ற விதத்தில் அதற்காக காத்திருப்போர் ஏராளம். இவ்வுலக வாழ்வில் நாம் நல்ல பங்கு என்று தேர்ந்தெடுத்த பல காரியங்கள் இவ்வுலகத்தோடு முடிந்துவிடும். 

   விண்ணுலக வாழ்வை உரிமையாக்கி கொள்ள நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு எது என்று சிந்திப்போம். இதை இன்றைய நற்செய்தி வழியாக விளக்குகிறார் நம் இறைவன். உலகம் சார்ந்த உபசரிப்பு, கடவுளின் வார்த்தைக்கு செவிமடுத்தல் இதில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடவுள் நம் அருகில் இருக்கும் போது நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கிறோமா? 

  தனக்கு உதவி செய்யவில்லை என்று பிறர் மீது குற்றம் சுமத்துகிறோமா? நாம் நினைத்தது இறைவேண்டல் செய்தது நமக்கு கிடைக்கவில்லை என்று இறைவன் மீது கோபம் கொள்கிறோமா? பிறவற்றை குறித்து கவலை கொள்கிறோமா அல்லது இறைவனில் ஒன்றித்து இருக்கிறோமா?தாழ்வு, பணிவு நம்மிடம் உள்ளதா? இத்தகைய அனைத்து கேள்விகளுக்கும் விடையாய் அமைந்துள்ளது மார்த்தா மரியா சகோதரிகள் நிகழ்வு. 

 ஆண்களுடன் அமர்ந்து இறைவார்த்தை கேட்பது புறக்கணிக்கப்பட்ட காலத்திலும் இறைவனின் பாதமருகே அமர்ந்து இறைவனின் வார்த்தைகளை கேட்டு புரட்சிப் பெண்ணாக திகழ்ந்தார் மரியா. நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நமது பங்கு விண்ணகம் சார்ந்ததாக அமைய வரம் கேட்டு திருப்பலியில் இணைவோம். 


முதல் வாசக முன்னுரை

   இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே. ஆபிரகாமுக்கு இறைத்திட்டப்படி மகன் வாக்களிக்கப்படுவதை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. தன் மக்களுக்கு இறைவன் அளித்த வாக்கு கண்டிப்பாக நிறைவேறும் என்பதை இவ்வாசகம் நமக்கு விளக்குகிறது. இந்த மீட்புத்திட்டம் குறித்த காலத்தில் நம்மில் நிறைவேறவும், அத்திட்டம் இறைவனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வாசகத்தை மனதில் ஏற்போம். 


இரண்டாம் வாசக முன்னுரை 

 கிறிஸ்துவின் தன்மையையும் அதனோடு திருத்தூதர் பவுல் திருச்சபைக்கு ஆற்றிய தொண்டையும் மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. தான் ஒரு திருத்தொண்டன் என்ற வகையில் தனக்கான பணிகள் குறித்து கூறுகிறார் தூய பவுல். அதனோடு இறைவார்த்தை வழியாக வெளிப்படும் இறைத்திட்டமும், மாட்சிமை பெற வழிமுறைகளும் இணைந்து கூறப்படுகிறது. இத்தகைய இறைத்திட்டம் இறைவார்த்தை வழியாக நம்மில் நிறைவேற வாசகத்திற்கு மனதை திறப்போம். 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

லூக்கா 8:15

   சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. எம்மை நீதியில் வழிநடத்தும் இறைவா! நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் அன்பு நிறைந்த நாட்டில் நீதித்துறை வலுவானதாக இருக்கும். நீதி நிலைத்துள்ள இடத்தில் அன்பு நிலைபெற்று இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து நீதியை விதைத்து அன்பை அறுவடை செய்ய வரம் தாரும் ஆண்டவரே.
  2. நேர்மையே உருவான இறைவா! உலகில் நேர்மையற்ற பலவிதமான அதிகாரிகளால் நேர்மையற்ற பல விஷயங்கள் நடைபெறுகின்றன இவை குறைந்து நேர்மையான சமுதாயம் உருவாகவும், நேர்மையை நாங்கள் வாழ்வில் கடைபிடித்து உமது வழியில் பயணிக்க உமதருள் பொழிந்தருளும் இறைவா. 
  3. மாட்சியின் மேன்மையை எமக்கு உணர்த்தும் இறைவா! ஒடுக்கு முறைகளுக்கு முடிவு கட்டி சமூகத்தை சீர்செய்வதும், சமத்துவ பாதையில் சமூகத்தை வழிநடத்தி பண்படுத்துவதும் எமது பணியே என்பதை நாங்கள் உணரவும், உமது பணியே மானுட விடுதலை பணி என்பதை உணர்ந்து பணி செய்யும் ஞானத்தை எமக்கருள உம்மை மன்றாடுகின்றோம். 
  4. இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா! பலிகளும் செபங்களும் மட்டுமே உமக்கு நிறைவைத் தருவது இல்லை மாறாக உறவுகளில் இணைவும் வலுவுமே உமக்கு நிறைவை தருபவை என்பதை நாங்கள் தெரிந்து சமூக உறவையும் இறைவுறவையும் மேம்படுத்த ஏற்றவை செய்ய வரமருள உம்மை வேண்டுகிறேன். 
  5. வாழ்வை வளப்படுத்தும் இறைவா! நெருக்கடி நேரத்தில் பதட்டமும் கலக்கமும் எம் நெஞ்சை நிறைத்து விடுகின்றன. அமைதியாய் அனைத்தையும் உற்றுநோக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், நெருக்கடி நேரங்களில் பொறுமை மற்றும் சாந்தத்தை கடைபிடிக்க உமதருள் தந்து எம்மை காக்க உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா