கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் வாரம் (கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா)


 நிறம்: வெள்ளை

வாசகங்கள்

முதல் வாசகம்: தொடக்க நூல் 14: 18-20

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 11: 23-26

நற்செய்தி வாசகம்: லூக்கா 9: 11-17

திருப்பலி முன்னுரை

    கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா அதனோடு இணைந்த ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையருள் பெற்றுசெல்ல வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். 

    தந்தை கடவுளின் அன்பு மனிதனை உருவாக்கி, அவனது அடிமைத்தளையை அகற்றி மீட்டெடுத்தது. ஆண்டவராகிய இயேசுவின் அன்போ அதற்கு மேலாக சென்று தன் உடலையும் இரத்தத்தையும் மனிதர்களுக்காக கையளித்தது. இத்தகைய அளப்பரிய செயலுக்கு உற்ற துணையாய் வலிமையளித்தவர் தூய ஆவி என்னும் பங்காளர். இங்ஙனம் மூவரும் திருச்சபையாகிய திருவுடலை கட்டியெழுப்புகின்றனர். 

    உலகில் ஒரு மனிதன் வழியாக சாவு வந்தது. மற்றொரு மனிதர் வழியாக மீட்பு வந்தது. அந்த மீட்புக்கு விலையானது திருவுடலும் திருஇரத்தமும். இந்த இரண்டும் இன்று நற்கருணை வடிவில் திருவிருந்தின் போது நம்மை சந்திக்கிறது. ஆகவே திருவிருந்தில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும் இறைமகனின் உயிர்ப்பையும் அவரது வருகையையும் நினைவுகூர்கிறோம். 

    "மனிதன் புனிதனாக வாழ ஒருமுறை நற்கருணை உட்கொண்டாலே போதும்" என்கிறார் மாக்ஸ் மில்லியன் கோல்பே. இவரின் கூற்றிற்கேற்ப திருவிருந்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் புனிதர் நிலையில் இறைவுறவில் வாழ முற்பட வேண்டும். கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை காக்கும் கவசங்களாகி நம்மை வழிநடத்தவும், இறை மனித உறவில் புனிதம் மலர நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கேற்போம். 

முதல் வாசக முன்னுரை

  எதிரிகளை ஆபிரகாமிடம் ஒப்படைத்து ஆபிரகாம் பெற்ற வெற்றியை கூறுகிறது இவ்வாசகம். ஆபிரகாமுக்கு கடவுளின் உன்னத குருவான மெல்கிசதேக்கின் ஆசியை எடுத்து கூறுகிறது. உலகமே உன்னை வெறுத்தாலும், கடவுளின் திட்டம் அவர் தேர்ந்து கொண்டவர்கள் வழியாக நிறைவேறும் என்பது இதன் வழி தெள்ளத்தெளிவாகிறது. நமது பிறப்பும் கடவுளின் திட்டத்திற்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் விரைவில் நிறைவேறும். இறைதிட்டப்படி நம் வாழ்வு அமைய வாசகத்தை உள்ளங்களில் நிறுத்துவோம். 

இரண்டாம் வாசக முன்னுரை

   ஆண்டவரின் திருவிருந்தை கொரிந்து நகர மக்களுக்கு எடுத்துரைக்கிறார் தூய பவுல். அவர் ஆண்டவரிடம் பெற்றுக் கொண்டதை நமக்கு அளிப்பதாகவும், ஆண்டவரின் திருவிருந்தை அவர் வரும் வரை எவ்வாறு நினைவுகூற வேண்டும் என்று கூறுகிறது இவ்வாசகம். ஆண்டவரின் திருவிருந்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறுகிறது. அவரின் விருந்தை முறைப்படி உண்போர் என்றென்றும் வாழ்வர் இத்திருவிருந்தை உட்கொள்ளும் நாம் அவரது நிலைவாழ்வில் பங்கேற்க வாசகத்தை மனதில் ஏற்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவான் 6: 51-52

   விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. உலகின் நலனில் அக்கறை கொண்ட இறைவா! நாட்டின் வளங்களை நாங்கள் பாதுகாக்கவும், வளங்கள் சுரண்டப்பட்டு மனித எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாக மாறுவது குறைந்து, நாட்டின் வளங்களையும் மக்களையும் பாதுகாக்கும் நல்லரசு உருவாக உம்மை இறைஞ்சுகிறோம்.
  2. எம்மை படைத்து நல்வழிப்படுத்தும் இறைவா! கோபம், பொய், பொறாமை, முன்விரோதம் போன்ற பல தீய குணங்களை உமது திருஇரத்தத்தின் துணையுடன் நாங்கள் அகற்றி உமது மனித நேயத்தை எங்கும் விதைக்க வரமருள மன்றாடுகின்றோம்.
  3. அன்பின் இறைவா! எம் நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகள், குற்றங்கள், பொய் சாட்சிகள், பிறரை ஏமாற்றும் குணம் ஆகியவை மறைந்து உம் அன்பின் நிழலில், உமது தியாகத்தை கைக்கொண்டு எங்கும் உமது இரக்கத்தைப் பறைசாற்ற வரமருளும். 
  4. சகோதரத்தின் உற்ற துணையே எம் இறைவா! எம் குடும்பங்களிலும் எம் சமூகத்திலும் நாங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையோடு என்றும் இணைந்து வாழவும், ஒருவருக்கொருவர் அன்பு செய்து உமது சகோதர அன்பில் இணைந்து இறைவுறவின் சகோதர பண்பில் இணைந்து செயல்பட உம் அருள் தாரும். 
  5. தியாகத்தின் ஊற்றே எம் இறைவா! உமது திருவுடல் திருஇரத்தம் விழாவை எண்ணிப்பார்க்கும் இந்த தருணத்தில் நீர் எமக்காக செய்த அனைத்து தியாகங்களையும் நாங்கள் நினைத்து, உமது தியாகமே திருச்சபையை வழிநடத்தும் அச்சாணி என்பதை உணர்ந்து, எம் வாழ்வை பிறருக்கு தியாகபலியாக்க வரமருளும். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா